பணி ஓய்வுபெற்ற ஆசிரியையை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்து மகிழ்வித்த மகன்

பணி ஓய்வுபெற்ற ஆசிரியையை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்து மகிழ்வித்த மகன்

1 mins read
033e9cb4-1826-4994-86d2-35c9f4d65689
ஹெலிகாப்டரில் வந்திறங்கும் சுசீலா. படம்: இந்திய ஊடகம் -

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தான் மாநி­லம் அஜ்­மீர் மாவட்­டத்­தைச் சேர்ந்த சுசீலா சவு­கான் கடந்த 33 ஆண்டு­களாக ஆசி­ரி­யை­யா­கப் பணி­யாற்றி நேற்று முன்­தி­னம் ஓய்­வு­பெற்­றார்.

இதை­ய­டுத்து பள்ளி ஊழி­யர்­களி­டம் இருந்து விடை­பெற்­றுக் கிளம்­பிய அவ­ருக்கு இன்ப அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

அமெ­ரிக்­கா­வில் பணி­யாற்­றும் சுசீ­லா­வின் மகன் யோகேஷ், தன் தாயாரை அவ­ரது கடைசி பணி நாளன்று பள்­ளி­யில் இருந்து வீட்­டிற்கு அழைத்­துச் செல்ல, ஹெலி­காப்­டர் ஏற்­பாடு செய்­திருந்­தார். இத­னால் மகிழ்ச்­சி­யில் திக்­கு­முக்­கா­டிப்­போன சுசீலா, பள்­ளி­யில் இருந்து அஜ்­மீர் நக­ருக்கு அருகே உள்ள தமது கிராம வீட்­டுக்கு ஹெலி­காப்­ட­ரில் வந்­தி­றங்­கி­னார்.

அப்­போது அக்­கி­ரா­மத்­தைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கா­னோர் அவரை வர­வேற்­ற­னர். பணி­யில் இருந்து ஓய்­வு­பெ­றும் தாயா­ருக்கு அவர் என்­றும் மற­வாத வகை­யில் தனித்­து­வ­மான பரிசை அளிக்க விரும்­பி­ய­தாக மகன் யோகேஷ் தெரி­வித்­தார்.