அனைத்துக் கட்சிகளும் அடங்கிய அரசாங்கத்திற்கு ரணில் அழைப்பு

அனைத்துக் கட்சிகளும் அடங்கிய அரசாங்கத்திற்கு ரணில் அழைப்பு

1 mins read
b8588ea9-15ff-404d-bfd7-5582bd1cb807
-

கொழும்பு: இலங்கைப் பொரு­ளி­ய­லுக்குப் புத்­து­யிர் கொடுக்­க­வும் சிர­ம­மான சீர­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் ஏது­வாக அனைத்து கட்­சி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ஐக்­கிய அர­சாங்­கம் அமைய வேண்­டும் என்று அந்த நாட்­டின் புதிய அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­வித்து இருக்­கி­றார்.

அந்த அர­சில் சேரும்படி நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர் முறைப்­படி அழைப்­பு­வி­டுத்து இருக்­கி­றார்.

அதி­பர் என்ற முறை­யில் புதிய பய­ணத்­தைத் தொடங்க விரும்­பு­கி­றேன் என்று திரு ரணில் கூறி­ய­தாகத் தக­வல் வெளி­யாகியுள்ளது.

"அந்­தப் பய­ணத்­தில் எல்லாக் கட்­சி­க­ளை­யும் உள்­ள­டக்க விரும்பு­கி­றேன். அனைத்துக் கட்­சி­களும் சேர்ந்து ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டும்," என்று ரணில் தெரி­வித்து இருக்­கி­றார்.

அப்­ப­டிப்­பட்ட ஓர் ஐக்­கிய அர­சாங்­கத்­தில் சேர்ந்­து­கொள்­ளும்­படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் திரு ரணில் கடிதம் எழுதி இருக்­கி­றார்.

இதற்­கி­டையே, இலங்­கைக்­கும் அனைத்­து­லகப் பண நிதி­யத்­துக்­கும் இடை­யில் ஓர் உடன்­பாடு ஏற்­பட்­டது என்­றும் ஆனால் கடந்த வாரங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்­த­தால் அந்த உடன்­பாடு செப்­டம்­பர் மாதத்­திற்கு ஒத்­தி­ப்போ­டப்­பட்டு­விட்­டது என்­றும் அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க கூறி­னார்.

இலங்கை வெளி­நாட்டு தனி அமைப்­பு­க­ளுக்கு S$16 பில்­லி­யன் பணத்தைத் திருப்பித் தர வேண்­டிய தேவையுள்ளது. இந்த நிலை­யில், புதிய அர­சு அமைந்­ததை அடுத்து, பண நிதி­யத்­து­டன் இலங்கை பேச்சு­வார்த்­தை­யைத் தொடங்­கி­யது. அது வெற்­றி­க­ர­மான முறை­யில் நடந்து வந்­தது என்று வெள்­ளிக்­கி­ழமை இலங்­கை­யின் நிதி அமைச்சு தெரி­வித்து இருந்­தது.