கின்னஸ் சாதனை படைத்த அமைச்சர் ரோஜா

கின்னஸ் சாதனை படைத்த அமைச்சர் ரோஜா

1 mins read
c6199a18-e37e-49fd-bf51-3d39cbe2f5cf
சாதனை முயற்சியின்போது ரோஜா. படம்: தகவல் ஊடகம் -

விஜயவாடா: ஒரே சம­யத்­தில் தம்மை மூவா­யி­ரம் பேர் புகைப்­ப­டம் எடுத்­த­தன் மூலம் கின்­னஸ் சாதனை படைத்­துள்­ளார் நடி­கை­யும் ஆந்­திர மாநில அமைச்­ச­ரு­மான ரோஜா.

நேற்று முன்­தி­னம் விஜ­ய­வா­டா­வில் அவ­ரது இந்தச் சாதனை முயற்சி நிகழ்வு நடை­பெற்­றது.

கின்­னஸ் சாதனை புத்­த­கத்­தில் இடம் பெறு­வ­தற்­காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்­தில் 3,000 பேர் புகைப்படம் எடுக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

ஆந்­திர மாநில விளை­யாட்டு, இளை­யர் மேம்­பாட்டுத் துறை அமைச்­ச­ராகப் பொறுப்பு வகிக்­கிறார் ரோஜா.

நேற்று முன்­தி­னம் ஆந்­திரா, தெலுங்­கானா மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மூவா­யி­ரம் புகைப்­ப­டக்­காரர்­கள் விஜ­ய­வா­டா­வில் உள்ள தனி­யார் மண்­ட­பத்­தில் குவிந்­த­னர்.

பின்­னர் அந்த மண்­ட­பத்­துக்கு வெளியே அமைக்­கப்­பட்டு இருந்த மேடை­யில் ரோஜா ஏறி நிற்க, அவ­ரைச் சுற்றி நின்ற புகைப்­ப­டக்­கா­ரர்­கள் அவ­ரைப் படம்­பி­டித்­த­னர்.

அனை­வ­ரும் ஒரு­சேர தங்­கள் கேம­ராக்­களை இயக்கி, அவ­ரைப் படம்­பி­டிப்­ப­தாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

உலக அள­வில் மூவா­யி­ரம் புகைப்­ப­டக்­கா­ரர்­கள் ஒரு பெண் அமைச்­சரை இவ்­வாறு படம்­பி­டித்­தி­ருப்­பது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

இதன் மூலம் 'வொண்­டர் புக் ஆப் ரெக்­கார்ட்' கின்­னஸ் சாதனை புத்­த­கத்­தில் இடம் பிடித்­தார் அமைச்­சர் ரோஜா. அவ­ருக்கு கின்­னஸ் சாத­னைக்­கான சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டதாக ஆந்திர ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.