மோடி: அமெரிக்கா, இங்கிலாந்துக்கு நிகராக இந்தியா வளர்ந்து வருகிறது

மோடி: அமெரிக்கா, இங்கிலாந்துக்கு நிகராக இந்தியா வளர்ந்து வருகிறது

1 mins read
8c60cb42-2bd3-4dc0-8e41-740fb41f81ce
-

அகமதாபாத்: அமெ­ரிக்கா, இங்­கி­லாந்­துக்கு இணை­யாக இந்­தியா வளர்ச்சி அடைந்து வரு­வ­தாக பிர­த­மர் நரேந்­திர மோடி பெரு­மி­தம் தெரி­வித்­துள்­ளார்.

அக­ம­தா­பாத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், அனைத்­து­லக நிதி நிர்­வா­கத்­தில் இது­வரை ஆதிக்­கம் செலுத்­தும் நாடு­க­ளாக அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நாடு­கள் திகழ்­வ­தா­க­வும்.

தற்­போது அந்­த­ வ­ரி­சை­யில் இந்­தி­யா­வும் இடம்­பெற்­றுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார். மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார நாடாக இந்­தியா வளர்ந்­துள்­ள­தா­க தெரி­வித்த அவர், அதிக அள­வி­லான வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்­கும் நாடா­க­வும் திகழ்­கிறது என்­றார்.

"கடந்த 2008ஆம் ஆண்டு உலக அள­வில் மிகப்­பெ­ரும் தேக்க நிலை உரு­வா­னது. அப்­போது எடுக்­கப்­பட்ட கொள்கை முடி­வு­க­ளால் இந்­தி­யா­வின் பொரு­ளா­தார சூழ­லும் பாதிப்­புக்­குள்­ளா­னது.

"அந்த சம­யத்­தில் குஜ­ராத் மாநி­லம் நிதித்­து­றை­யில் மிக முக்­கி­ய­மான முடிவை மேற்­கொண்­டது. அப்­போது உரு­வான சிந்­த­னை­யின் வெளிப்­பாடு இன்று வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

"21ஆம் நூற்­றாண்­டில் நிதி மற்­றும் தொழில்­நுட்­பம் ஒன்­றுக்­கொன்று தொடர்­பு­டை­யவை. தொழில்­நுட்­பம் என்று எடுத்­துக் கொண்­டால் அது அறி­வி­ய­லும் கணி­னிச் செய­லி­களும் ஒன்­றி­ணைந்­தது. இதில் இந்­தி­யா­வுக்கு மிகுந்த அனு­ப­வம் உள்­ளது. மின்­னி­லக்க பரி­வர்த்­த­னை­யில் உலக அள­வில் இந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு 40 விழுக்­கா­டாக உள்­ளது," என்­றார் பிர­த­மர் மோடி.

இந்தியாவின் 130 கோடி மக்களும் நவீன பொருளாதாரத்துடன் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பணியை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றார்.