பாட்டியாலா: பணம் அளிக்கும் முகப்புக்கு அருகே ஏடிஎம்மில் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.35 லட்சம் பணம் இருந்த பையை, பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் எடுத்துக் கொண்டு அமைதியாக வெளியேறுவது கண்காணிப்புக் கருவியில் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சண்டிகரில் பாட்டியாலா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் நடந்தது. இந்த திருட்டுச் சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அந்தச் சிறுவன், வேறொருவருடன் வங்கிக்குள் நுழைவதும், அவர்கள் சுமார் 20 நிமிடம் வங்கியின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், அந்தப் பையை வங்கியில் பாதுகாவலராக இருந்தவர் கீழே வைத்துவிட்டு அறையை பூட்டுவதற்குள் சிறுவன் திருடிச் சென்றதாக ஊழியர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து தேடுதல் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளை: 10 வயது சிறுவனுக்கு காவல்துறை வலைவீச்சு
1 mins read
-