ராகுல்: நிதியமைச்சருக்கு மக்களின் வேதனை தெரியவில்லை

புது­டெல்லி: முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தை­யும் மீறி, டெல்­லி­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் நேற்று முன்­தி­னம் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

விலை­வாசி உயர்வு, வேலை­யில்­லாத் திண்­டாட்­டம், காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யி­டம் அம­லாக்­கத்­துறை நடத்தி வரும் விசா­ரணை ஆகி­ய­வற்­றைக் கண்­டித்து இந்­தப் போராட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ராகுல்­காந்தி எம்பி, நாடு முழு­வ­தும் வேலை­யில்­லாத் திண்­டாட்­டம் தலை­வி­ரித்து ஆடு­கிறது என்­றும் அனைத்­துப் பொருள்களின் விலை­யும் கடு­மை­யாக உயர்ந்­து­விட்­டது என்­றும் குற்­றம்­சாட்­டி­னார்.

மக்­கள் படும் வேதனை குறித்து மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு ஒன்­றும் தெரி­ய­வில்லை என்­றும் இந்­திய பொரு­ளி­யல் குறித்து அமைச்­ச­ருக்கு எந்­த­வி­தப் புரி­த­லும் இல்லை என்றும் விமர்­சித்­தார் ராகுல்.

"நிதி அமைச்­சர் வெறும் ஊது­கு­ழ­லாக மட்­டுமே செயல்­ப­டு­கி­றார். ஹிட்­ல­ரும்­கூட அனைத்து தேர்­தல்­க­ளி­லும் வெற்றி பெற்­ற­வர்­தான். எனி­னும், அவர் எவ்­வாறு வெற்றி பெற்­றார் என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும்.

"நாட்­டில் உள்ள அனைத்து அமைப்­பு­க­ளை­யும் எங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கட்­டும். தேர்­த­லில் எப்­படி வெல்­கி­றார்­கள் என்­ப­தைக் காண்­பிக்­கி­றேன்," என்­றார் ராகுல்.

முன்­ன­தாக, பிர­த­மர் மோடி வீட்டை முற்­று­கை­யிட முயன்ற காங்­கி­ர­சார் காவல்­து­றை­யி­ன­ரால் குண்­டுக்­கட்­டாக அப்­பு­ற­டுத்­தப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!