செல்ஃபி எடுத்த இளையர்களைத் துரத்திய யானைக் கூட்டம்

செல்ஃபி எடுத்த இளையர்களைத் துரத்திய யானைக் கூட்டம்

1 mins read
73b9a9d9-cdda-464e-9f5c-a5f209d8e5af
-
Google News Preferred Icon

இப்போது கைப்பேசியில் செல்ஃபி எடுத்துக்கொள்வது வழக்கமான செயலாகிவிட்டது. அதிலும் சிலர் அதையே ஒரு மோகமாகக் கொண்டுள்ளனர். சிலர் பயங்கரமான சூழலில் செல்ஃபி எடுத்து உயிரையும் விட்டுள்ளனர்.

இங்கு அதே போல் செல்ஃபி எடுக்கும் இளையர்களின் முயற்சி அசம்பாவத்தில் முடியப் பார்த்தது.

இந்திய வனப்பகுதி ஒன்றில் ஒரு யானைக் கூட்டத்திற்கு முன்னால் இளையர்கள் சிலர் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

யானைகள் என்னவோ முதலில் அந்த இளையர்களைவிட்டு ஒதுங்கப் பார்த்தது. அப்போது யானைகளைப் பார்த்து ஒர் இளையர் சத்தம் போடவே யானைகள் இளையர்களை நோக்கி ஓடி வந்தன.

நல்ல வேளையாக அந்த இளையர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பினர்.