பாதுகாப்புப் படையினருக்கு 'ராக்கி' கயிறு கட்டிய மாணவிகள்

பாதுகாப்புப் படையினருக்கு 'ராக்கி' கயிறு கட்டிய மாணவிகள்

1 mins read
9fa6a16c-0f2e-4304-86ba-cba87dc9ec4e
-

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் 'ரக்‌ஷா பந்தன்' பண்டிகையை ஒட்டி, இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லைப் பகுதியில் பணியாற்றிவரும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பள்ளி மாணவிகள் 'ராக்கி' கயிறு கட்டி, அவர்களை மகிழ்வித்தனர். பஞ்சாப்பைச் சேர்ந்த ரிங்கிள் கபூர் என்ற பெண்மணி பள்ளி மாணவர்களால் தயாரிக்கப் பட்ட 1,500 கயிறுகளுடன் காஷ்மீரின் குப்வாரா எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள பாதுகாப்புப் படையினருக்கு அவற்றை அணிவித்தார். மேலும், வீரர்களுக்கு மாணவிகள் வாழ்த்து தெரிவிக்கும் காணொளிப் பதிவும் இந்நிகழ்வின்போது காண்பிக்கப்பட்டது.

படம்: ஏஎஃப்பி