70 வயதில் ஆண் குழந்தை பெற்று வியக்கவைத்த மூதாட்டி

70 வயதில் ஆண் குழந்தை பெற்று வியக்கவைத்த மூதாட்டி

1 mins read
34651cdc-9098-4691-be60-0c9a960eb300
-
Google News Preferred Icon

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தா­னைச் சேர்ந்த 75 வயது முன்­னாள் ராணுவ வீரைன் 70 வயது மனைவி, திரு­ம­ண­மாகி 54 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு முதன்­மு­றை­யா­கக் குழந்தை பெற்­றுக்­கொண்­டார். கோபி சிங் - சந்­தி­ர­தேவி என்ற இந்­தத் தம்­ப­தி­யர் குழந்­தை­யின்­மைக்­கா­கப் பல மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வந்­த­னர். இந்த நி­லை­யில், கடந்த ஒன்­றரை ஆண்டு­க­ளுக்­கு­முன் தங்­கள் உற­வி­னர் ஒரு­வர் மூலம் ஆல்­வா­வில் உள்ள ஒரு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­னர். அங்கு ஐவி­எஃப் முறை­யில் கருத்­த­ரிக்க திரு­வாட்டி சந்­தி­ர­தே­விக்­குச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. தொடக்­கத்­தில் சற்று அஞ்­சி­னா­லும் குழந்தை வேண்­டும் என்ற ஆசை­யால், ஆரோக்­கி­ய­மா­க ஆண் குழந்­தையை ஈன்றெடுத்­தார் இம்மூதாட்டி.