அன்பிற்கு இல்லை அடைக்கும் தாழ்

அன்பிற்கு இல்லை அடைக்கும் தாழ்

1 mins read
d3ead9bf-26e2-45aa-8444-9823eb902e72
இந்தியரான சிகா கான் (வலது) பாகிஸ்தானில் வசித்த தனது அண்ணன் சாதிக் கானை 75 ஆண்டுகள் கழித்து சந்தித்தபோது சகோதரர்கள் கண்ணீர் உகுத்தனர். படம்: ஏஎஃப்பி -

பாடிண்டா: பிரிட்­டிஷ் கால­னித்­துவ ஆட்சி முடிந்து இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் 1947ஆம் ஆண்டு பிரிந்­த­போது ஆறு மாதக் குழந்­தை­யான சிகா கானின் குடும்­பம் சின்­னா­பின்­ன­மா­னது.

அவ­ரது தந்­தை­யும் சகோ­த­ரி­யும் கல­வ­ரத்­தில் கொல்­லப்­பட்­ட­னர். தாயாரோ ஆற்­றில் குதித்­துத் தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டார். பத்து வயது நிரம்­பிய அண்­ணன் சாதிக் கான் பாகிஸ்­தா­னுக்­குத் தப்­பி­யோ­டி­னார்.

கிரா­மத்­தார், உற­வி­னர்­கள் ஆகி­யோ­ரின் கரு­ணை­யால் வளர்ந்த சிகா, நினைவு தெரிந்த நாளில் இருந்தே தன் குடும்­பத்­தில் எஞ்­சிய ஒரே ஆளான தமை­ய­னைத் தேடி­னார். மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு மருத்­து­வர் ஒரு­வர் உதவ முன்­வந்து 'யூடி­யூப்' பதி­வா­ளர் நசீர் தில்லனின் உத­வி­யு­டன் சகோ­த­ரர்­க­ளைச் சேர்த்து வைக்க முயற்சி எடுத்­தார்.

இந்­திய சீக்­கி­யர்­கள் பாகிஸ்­தா­னின் கர்த்­தா­பூர் எனும் இடத்­தில் உள்ள சீக்­கி­யக் கோயி­லுக்கு விசா இல்­லா­மல் செல்ல அனு­ம­திக்­கப்­படும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி இவர்­களை இணைத்து வைத்­தார்.

அணைத்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர் அண்ணனும் தம்பியும். முஸ்­லி­மான நசீர் தில்­ல­னும் பாகிஸ்­தா­னிய சீக்­கி­யர் பூபிந்­தர் சிங்­கும் இது­வரை இத்­த­கைய 300க்கும் மேற்­பட்ட குடும்­பங்­களை இணைத்து வைத்­துள்­ள­னர்.