புதுடெல்லி: நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 15,000க்கு மேல் பதிவாகும் நிலையில், சுதந்திர தினத்துக்கு பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்க்கும்படி மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொவிட்-19 கிருமிப்பரவலைத் தடுக்கும் கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 16,561 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியானது.

