புதுடெல்லி: தலைநகரின் ஆனந்த் விகார் பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் 2,000 தோட்டாக்கள், வெடிமருந்துகள் அடங்கிய பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வெடிபொருள்களைக் கைப்பற்றிய அதிகாரிகள் இதன் தொடர்பில் ஆறு பேரைக் கைது செய்தனர். வரும் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. வெடிபொருள்களுடன் கைது செய்யப்பட்ட அறுவரிடமும் விசாரணை தொடர்கிறது.

