செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bd71fd2f-4469-4586-83a4-c108b3978964
-

சசி தரூருக்கு செவாலியர் விருது

திருவனந்தபுரம்: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிரான்ஸ் அரசு உயரிய செவாலியர் விருதை வழங்கிக் கௌரவித்து வருகிறது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூருக்கு செவாலியர் விருது கிடைத்து உள்ளது.

பேச்சு மற்றும் எழுத்துத் துறையில் பல சாதனைகளைப் படைத்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து சசி தரூர் கூறுகையில், 'எனக்கு உயரிய செவாலியர் விருதை வழங்க தீர்மானித்துள்ள பிரான்ஸ் அரசுக்கு நன்றி,' என தெரிவித்தார்.

9 கி.மீ. நீள தேசியக் கொடியை ஏந்தி 50,000 பேர் ஊர்வலம்

பெங்களூரு: கர்நாடகாவின் ஹுபாலியின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் 9 கிலோமீட்டர் நீளம் மற்றும் 9 அடி அகலம் கொண்ட மூவர்ணக் கொடியை 50,000க்கும் மேற்பட்டோர் சுமந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான முயற்சிக்கு முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் லாட் தலைமை தாங்குகிறார்.

கலகத்கி - அல்நாவர் தாலுகாவை சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த சாதனை முயற்சியில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த ஆண்டில் 8,000 பேர் கலந்துகொண்ட பேரணியில் 2 கிமீ நீளம், 9 அடி அகலம் உள்ள தேசிய கொடி சுமந்து செல்லப்பட்டு 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.