'கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது'

'கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது'

2 mins read
bfcf59c9-ce95-4f55-9843-c600de588c89
-

புது­டெல்லி: கடன் வாங்­கி­ய­வர்­க­ளி­டம், கடன் வசூ­லிப்­பது குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்­ளது.

இது­கு­றித்து அந்த வங்கி ஏற்­கெ­னவே வெளி­யிட்ட வழி­காட்டி நெறி­மு­றை­கள் முறை­யா­கப் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

எனவே, நேற்று முன்­தி­னம் அந்த வங்கி கூடு­த­லாக உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­துள்­ளது. கடன் வாங்­கி­ய­வர்­க­ளி­டம் இருந்து மாதத் தவ­ணையை வசூ­லிப்­ப­தில் வசூல் முக­வர்­கள் வங்­கி­யின் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் அடா­வ­டித்­த­னத்­தில் இறங்கி வரு­கின்­ற­னர். இது பற்றி தக­வல் அறிந்த ரிசர்வ் வங்கி, புதிய விதி­மு­றை­களை அமல்­ப­டுத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது.

வங்­கி­கள், வங்­கி­சாரா நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை தங்­க­ளது கடன் வசூல் முக­வர்­கள், கடன் பெற்­ற­வர்­களை எந்த வகை­யி­லும் வாய்­மொ­ழி­யா­கவோ, உடல்­ரீ­தி­யா­கவோ துன்­பு­றுத்­தா­மல் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும்.

எவ்­வ­கை­யி­லும் அநா­க­ரி­க­மான குறுஞ்­செய்­தி­களை அனுப்­பக்­கூடாது. தொலை­பே­சி­யில் மிரட்­டல்­கள் விடுப்பதோ கூடாது.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைப்படி கடன் தவ­ணையைச் செலுத்­து­மாறு இரவு 7 மணிக்கு பிற­கும் காலை 8 மணிக்கு முன்­பும் தொலை­பே­சி­யில் தொடர்புகொள்­ளக்­கூ­டாது.

இந்தப் புதிய உத்­த­ர­வு­கள், அனைத்து வணிக வங்­கி­கள், கிரா­மப்­புற வங்­கி­கள், கூட்­டு­றவு வங்­கி­கள், வங்­கி­சாரா நிதி நிறு­வ­னங்­கள், சொத்து மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னங்­கள், அகில இந்­திய நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்குப் பொருந்­தும் என்று ரிசர்வ் வங்கி கூறி­யுள்­ளது.

இந்நிலையில், மின்னியல் முறையில் கடன் வழங்குவதற்கும் பெறுவதற்கும் புதிய விதிமுறைகளையும் விதித்துள்ளது.

மின்னியல் கடன் மோசடிகளைத் தடுக்கவும் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் மின்னில் கடன் குறித்து, முதல் கட்ட விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.