ஒரு கோடி மாணவர்கள் நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாடி உலக சாதனை

ஒரு கோடி மாணவர்கள் நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாடி உலக சாதனை

1 mins read
bccd2b3a-1ae4-408f-9e8c-09dbe6e153ad
-

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தா­னில் சுதந்­திர தினத்­தை­யொட்டி ஒரு கோடி மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நாட்­டுப் பற்­றுப் பாடல்­க­ளைப் பாடி உலக சாதனை நிகழ்த்­தி­யுள்­ள­னர். ராஜஸ்­தான் மாநி­லம் ஜெய்ப்­பூ­ரில் உள்ள சவாய் மான்­சிங் திட­லில் ஒரு கோடி மாண­வர்­கள் நேற்று முன்­தி­னம் ஒன்று கூடி நாட்­டுப் பற்­றைப் பறை­சாற்­றும் பாடல்­க­ளைப் பாடி உலக சாதனை நிகழ்த்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி ஒரு கோடி மாண­வர்­கள் 25 நிமிட நேரம் தேசிய கீதம் உள்­ளிட்ட நாட்­டுப் பற்­றுப் பாடல்­க­ளைப் பாடி­னர்.

இது உல­கச் சாத­னை­யாகப் பதி­வாகி உள்­ளது. இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று பாடிய மாண­வர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அசோக் கெலாட் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார். இதை­யொட்டி அவர் விடுத்­துள்ள செய்­தி­யில், 'வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ்', ஒரு கோடி மாண­வர்­கள் பாடிய பாடல்­க­ளைக் கேட்டு, மாநில அர­சி­டம் சான்­றி­தழை வழங்­கி­ய­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன்," என தெரி­வித்­துள்­ளார்.