டெல்லி செங்கோட்டையில் மோடி சுதந்திர தின கொடி ஏற்றுகிறார்

டெல்லி செங்கோட்டையில் மோடி சுதந்திர தின கொடி ஏற்றுகிறார்

2 mins read
11f86cd1-b176-45cf-8286-5bb36791c312
செங்கோட்டை முன்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர். : ஊடகம் -

புது­டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்­தை­யொட்டி காஷ்­மீர் முதல் கன்­னி­யா­கு­மரி வரை பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்டுள்ளன. டெல்­லி­யில் செங்­கோட்டை அமைந்­துள்ள பகு­தி­யில் மட்­டும் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினருமாக சுமார் பத்­தா­யி­ரம் பேர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இன்று காலை செங்­கோட்­டை­யில் பிர­த­மர் நரேந்­திர மோடி தேசிய கொடி­யேற்­று­கி­றார்.

இந்­நி­கழ்­வில் சுமார் 7,000 பேர் பங்­கேற்க உள்­ள­னர். சுதந்­திர தினத்தைச் சீர்­கு­லைக்க பயங்­க­ர­வாத இயக்­கங்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக மத்­திய உள­வுத்­துறை எச்­சரித்­துள்ள போதி­லும், அனைத்து மாநிலங்­களும் 75வது சுதந்­திர தினத்தை முடிந்­த­வரை சிறப்­பாகக் கொண்­டாட வேண்­டும் என மத்­திய அரசு கேட்­டுக்கொண்­டுள்­ளது.

மேலும், நாட்டு மக்­கள் அனை­வரும் தங்­கள் வீடு­க­ளி­லும் தேசிய கொடியை பறக்­க­விட வேண்­டும் என்­று பிரதமர் மோடி அறி­வு­றுத்தி இருந்­தார். இதை ஏற்­றுக்­கொண்டு மத்­திய, மாநில அமைச்­சர்­கள், அர­சி­யல் தலை­வர்­கள், திரை­யு­ல­கத்­தி­னர் மட்­டு­மல்­லா­மல் சாமா­னி­யர்­களும் தங்­கள் வீடு­க­ளின் முன்பு தேசி­ய­கொ­டியை ஏற்றி வைத்­துள்­ள­னர். நூறு வய­தான பிர­த­மர் மோடி­யின் தாயார் ஹீரா­பென், குஜ­ராத்­தில் உள்ள தமது வீட்­டில் தேசி­ய கொடி­யேற்­றி­னார்.

இன்று டெல்லி செங்­கோட்­டை­யில் பிர­த­மர் மோடி தேசி­ய கொடி ஏற்­றி ­வைத்து உரை­யாற்­று­வார். இதில் மத்­திய அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், முப்­ப­டைத் தள­ப­தி­கள், உய­ர­தி­கா­ரி­கள், வெளி­நாட்­டுத் தூதர்­கள் உள்­ளிட்ட ஏழா­யி­ரம் பேர் பங்­கேற்­பார்­கள் எனத் தெரி­கிறது.

இதை­ய­டுத்து செங்­கோட்­டை­யைச் சுற்­றி­யுள்ள ஐந்து கிலோ மீட்­டர் பரப்­பி­லான வான் பகு­தி­யில் ஆளில்லா வானூர்­தி­கள், பட்­டங்­கள், பலூன்­கள் ஆகி­ய­வற்­றுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் செங்­கோட்டை பகுதி ராணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

10,000 காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிப்பு; டெல்லியில் தீவிர கண்காணிப்பு