டெல்லி வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு

டெல்லி வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு

1 mins read
40a2d671-db9f-4a40-81fa-7bd944f2f0cf
-

புது­டெல்லி: ஆப்­பி­ரிக்­கா­வில் இருந்து டெல்லி வந்­த­டைந்த பெண்­ணுக்கு குரங்­கம்மை பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது.

ஒரு மாதத்­துக்கு முன்பு, 22 வய­தான அந்­தப் பெண் அண்­மை­யில் நைஜீ­ரியா சென்று வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டதை அடுத்து அவர் டெல்­லி­யில் உள்ள மருத்து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவரது மாதி­ரி­கள் பரி­சோ­தனைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.

அதன் மூலம் அவ­ருக்கு குரங்­கம்மை பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் டெல்­லி­யில் இந்­தப் பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை ஐந்­தாக உயர்ந்­துள்­ளது என்றும் டெல்லி சுகா­தா­ரத்­துறை அறிக்கை ஒன்­றின் வழி தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே நாடு முழு­வ­தும் குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 10 ஆக அதி­க­ரித்­துள்­ளது. எனி­னும் மக்­கள் பீதி அடை­யத் தேவை­யில்லை என நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.