அடுத்தடுத்து காலமான இரு இந்திய பிரபலங்கள்

அடுத்தடுத்து காலமான இரு இந்திய பிரபலங்கள்

2 mins read
74996973-3466-40c1-a784-67a9591e59d1
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, சரோஜ் நாராயணசாமி. ங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

மும்பை: நாட­றிந்த இரு பிர­ப­லங்கள் அடுத்தடுத்து கால­மா­கி­னர். இந்திய தொழி­ல­தி­ப­ரும் பிர­பல பங்­குச்­சந்தை வர்த்­த­க­ரு­மான ராகேஷ் ஜுன்­ஜுன்­வாலா தனது 62 வய­தில் நேற்று மும்­பை­யில் கால­மா­னார்.

இதற்­கி­டையே அகில இந்­திய வானொ­லி­யின் முதல் தமிழ்ச் செய்தி வாசிப்­பா­ள­ரான சரோஜ் நாரா­ய­ண­சா­மி­யும் (87 வயது) உடல்­ந­லக்­கு­றை­வால் காலமானார்.

62 வய­தான ராகேஷ் ஜுன்­ஜுன்­வாலா சிறு­நீ­ரக பாதிப்­புக்­காக சிகிச்சை பெற்று வந்­தார். இந்­நிலையில் சிறு­நீ­ரக செய­லி­ழப்­பால் அவர் இறந்­தி­ருக்­கக்­கூ­டும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

'இந்­தி­யா­வின் வாரன் பஃபெட்' என்று அழைக்­கப்­படும் அவ­ரு­டைய நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­கள் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தெரிவிக்­கிறது. கடந்த 1985ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்தபோது அவருக்கு வயது 25. தனது உறவினர் ஒருவரிடமிருந்து நூறு அமெரிக்க டாலரை கடனாகப் பெற்று தனது முயற்சியைத் தொடங்கினார்.

நாள­டை­வில் சொந்த நிறு­வ­னம் தொடங்கி, வெற்­றி­க­ர­மாக வழி­நடத்தி பங்­குச்­சந்தை வர்த்­த­கத்­தில் பல உய­ரங்­க­ளைத் தொட்­ட­வர் ஜுன்­ஜுன்­வாலா. 'அவர் தொட்­டது எல்­லாம் பொன்­னா­கும் எனப் பெயர் எ­டுத்­துள்­ளார்' என்று 'ஃபோர்ப்ஸ்' சஞ்சிகை ஒருமுறை குறிப்பிட்டது.

கடந்த 1980, 90களில் அகில இந்­திய வானொ­லி­யில் நாள்­தோறும் காலை செய்­தி­களை வாசிப்­பார் சரோஜ் நாரா­ய­ண­சாமி.

தனித்­து­வ­மிக்க அவ­ரது குரல், தெளி­வான உச்­ச­ரிப்பு ஆகி­ய­வற்­றால் நாடு தழு­விய அள­வில் அவர் பிர­ப­ல­மா­னார். தஞ்­சா­வூ­ரில் பிறந்த அவர் மும்­பை­யில் கல்வி கற்­றார்.

திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் செய்தி வாசிப்­பா­ளர் பணி­யில் சேர்ந்த அவர், சுமார் 35 ஆண்­டு­கா­லம் அந்­தப் பணி­யில் நீடித்­தார். அவ­ருக்கு தமி­ழக அரசு கலை­மாமணி விரு­த­ளித்து கௌர­வித்­தது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்ம ராவ் உள்ளிட்டோரை அவர் நேர்காணல் செய்துள்ளார்.