புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதினோறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் இந்திய ஜனநாயகம் பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது என்றும் அக்கட்சிகள் கூறியுள்ளன.
நேற்று முன்தினம் டெல்லியில் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத கம்யூனிஸ்ட், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
அதன் முடிவில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில குறைபாடுகள் இருப்பதால் அவை மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் என ஒரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஊடகத் தளங்கள் தவறான, வெறுப்பூட்டும் செய்திகளை பரப்ப தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் இரு வெவ்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

