தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் திறப்பு

1 mins read
7b77ba7c-f810-4829-9268-07376f974d14
-

ஸ்ரீந­கர்: உல­கின் மிக உய­ர­மான ரயில்வே பாலம் நேற்று முன்­தி­னம் ஜம்மு காஷ்­மீ­ரில் திறந்து வைக்­கப்­பட்­டது.

செனாப் ஆற்­றின் குறுக்கே சுமார் 1,178 அடி உய­ரத்­தில் இந்­தப் பாலம் அமைந்­துள்­ளது. மேலும், இந்­தப் பாலத்­தின் நீளம் 4,314 அடி என்­றும் இரும்பு, கான்­கி­ரீட் ஆகி­ய­வற்­றைக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் காஷ்­மீர் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் பாலத்­தின் மூலம் காஷ்­மீ­ரின் ஸ்ரீந­கர் பகு­தியை நாட்­டின் இதர பகு­தி­க­ளு­டன் எளி­தில் இணைக்க முடி­யும் என்­றும் கடந்த 2004ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட கட்­டு­மா­னப் பணி பல்­வேறு சவால்களைக் கடந்து தற்­போது முடி­வுக்கு வந்­துள்­ளது என்­றும் ரயில்வே துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.