ஸ்ரீநகர்: உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் திறந்து வைக்கப்பட்டது.
செனாப் ஆற்றின் குறுக்கே சுமார் 1,178 அடி உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. மேலும், இந்தப் பாலத்தின் நீளம் 4,314 அடி என்றும் இரும்பு, கான்கிரீட் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும் காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாலத்தின் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியை நாட்டின் இதர பகுதிகளுடன் எளிதில் இணைக்க முடியும் என்றும் கடந்த 2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.