செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
abccab5d-ef9e-44fe-954a-eb2ca3738c90
-

நுபுர் சர்மாவைக் கொல்லத் திட்டமிட்ட தீவிரவாதி கைதானார்

லக்னோ: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து களைத் தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொல்லத் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதானார். அவருக்குத் தீவிரவாத இயக்கங் களுடன் தொடர்புள்ளதாகவும் உத்தரப் பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகச் செய்தி கூறுகிறது.

குடிநீர்ப் பானையை தொட்ட சிறுவனை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் சுரனா கிராமப் பள்ளி யில் படித்து வந்த ஒன்பது வயதுச் சிறுவன் இந்திர மேக்வல், ஆசிரியர் கண்மூடித்தனமாக அடித்ததில் உயிரிழந்துவிட்டான். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுவன் வகுப்பறையில் இருந்த குடிநீர்ப் பானையைத் தொட்டு அதில் இருந்த தண்ணீரைக் குடித்துள்ளான். இதைக் கண்டு வெகுண்டெழுந்த 40 வயதான வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங், மாணவனைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் உயி ரிழந்தான். ஆசிரியர் மீது கொலை வழக்குப் பதிவாகி உள்ளது.

வீரர்களைப் பாராட்டிய பிரதமர் மோடி

புதுடெல்லி: திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களை அவர் நேரில் நேரில் சந்தித்துப் பாராட்டினார். அப்போது இந்திய வீரர்களின் சாதனைகள் மிகுந்த பெருமிதம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.