சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் கைது

சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் கைது

1 mins read
970c0ed1-ccf7-49fd-9855-f149f406dc9e
-

இம்­பால்: சுதந்­திர தினத்தை சீர்­குலைக்­கும் நோக்­கத்­து­டன் பயங்­கர ஆயு­தங்­க­ளு­டன் பதுங்கி இருந்த 11 பயங்­க­ர­வா­தி­கள் கைதாகி உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் மணிப்­பூ­ரில் பஞ்­சாப்­பி­லும் பாது­காப்­புப் படை­யி­னர் மேற்­கொண்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது, 11 பேரும் சிக்­கி­னர்.

இதற்­கி­டையே மேகா­லயா மாநி­லத்­தில் ஏரா­ள­மான வெடி­பொ­ருள்­களும் ஆயு­தங்­களும் சிக்­கின. இது தொடர்­பாக தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

வட­கி­ழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரின் தலை­ந­கர் இம்­பா­லில், சுதந்­திர தின விழாவை சீர்­கு­லைக்­கும் நோக்­கில் பயங்­க­ர­வா­தி­கள் ஆயு­தங்­க­ளு­டன் பதுங்­கி­யி­ருப்­ப­தாக பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு இரு தினங்­க­ளுக்கு முன்­னர் ரக­சிய தக­வல் கிடைத்­தது.

அதன் அடிப்­ப­டை­யில் பாது­காப்­புப் படை­யி­னர் தீவிர தேடு­தல் வேட்­டையை மேற்­கொண்டதில் ரக­சிய இடத்­தில் பதுங்கி இருந்த ஏழு பயங்­க­ர­வா­தி­கள் கைதா­கி­னர்.

இதே­போல் பஞ்­சாப் மாநி­லத்­தி­லும் தீவிர தேடு­தல் வேட்டை நடத்­தப்­பட்­டது. இதில் நான்கு பேர் சிக்­கி­னர்.

சண்­டி­கர் நக­ரில் மிகப்­பெ­ரிய தாக்­கு­தல் நடத்த அவர்­கள் திட்­ட­மிட்டு இருந்­த­தா­க­வும் டெல்லி காவல்­துறை அளித்த சில தக­வல்­க­ளின் உத­வி­யோடு சதித்­திட்­டம் முறி­ய­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் பஞ்­சாப் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.