சோனியா: தலைவர்களை இழிவுபடுத்தி விட்டார் மோடி

புது­டெல்லி: இந்­தி­யா­வின் அடை­யா­ளங்­க­ளா­கத் திக­ழும் தலை­வர்­களை பிர­த­மர் மோடி இழி­வு­ப­டுத்­தி­விட்­ட­தாக காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

சுதந்­திர தினத்­தன்று காந்தி, நேரு உள்­ளிட்ட தலை­வர்­களை கொச்­சைப்­ப­டுத்­து­வது சரியா என அவர் கேள்வி எழுப்பி உள்­ளார்.

மகாத்மா காந்தி, நேரு­வுக்கு எதி­ராக பொய்­யான தக­வல்­கள் பரப்­பப்­ப­டு­வதை சகித்­துக் கொள்ள முடி­யாது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தற்­போது மத்­தி­யில் ஆட்­சி­யில் உள்ள அர­சாங்­கம், நமது சுதந்­திர போராட்ட வீரர்­க­ளின் மகத்­தான தியா­கங்­கள், கடந்­த­கால சாத­னை­களை அற்­ப­மா­னவை என நிரூ­பிப்­ப­தில் முனைப்­பாக உள்­ளது. இதை ஏற்க முடி­யாது.

"அர­சி­யல் ஆதா­யங்­க­ளுக்­காக வர­லாற்று உண்­மை­கள் குறித்த தவ­றான அறிக்­கை­களை மத்­திய அரசு வெளி­யிட்டு வரு­கிறது. அது மட்­டு­மல்­லாது காந்தி, நேரு, பட்டேல், ஆசாத் போன்ற தேசிய தலை­வர்­க­ளின் மீது இந்த அரசு கேள்­வி­க­ளை­யும் விமர்­ச­னங்­க­ளை­யும் எழுப்பி வரு­கிறது," என்று அறிக்கை ஒன்­றில் சோனியா காந்தி குறிப்­பிட்­டுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தி­லும் ஒரு பதிவு இடம்­பெற்­றுள்­ளது.

"பொது­மக்­க­ளி­டம் கொள்­ளை­ய­டித்து தேர்ந்த தொழி­ல­தி­பர் நண்­பர்­க­ளின் பையை நிரப்­பு­ப­வர்­கள் மகாத்மா காந்­தி­யின் பெயரை பயன்­ப­டுத்­தா­மல் இருப்­பது நல்­லது," என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், நாட்­டில் பணக்­கா­ரர்­க­ளுக்­கும் ஏழை­க­ளுக்­கும் இடை­யி­லான இடை­வெளி அதி­க­ரித்து வரு­கிறது என்­றும் காங்­கி­ரஸ் சாடி­உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!