பாஜக, காங்கிரஸ் தவறான தகவல்களை வெளியிட்டன

பாஜக, காங்கிரஸ் தவறான தகவல்களை வெளியிட்டன

1 mins read
c54bcf6c-80ab-4ea9-bd8d-3521e8e5248f
-

புது­டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்­தேர்­த­லின்­போது பாஜக, காங்­கி­ரஸ் ஆகிய இரு கட்­சி­களும் சமூக ஊட­கங்­கள் வழி பொய்­யான தக­வல்­க­ளைப் பரப்­பி­ய­தாக அண்­மைய ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

'மைக்­ரோ­சா­ஃப்ட் இந்­தியா'வின் ஆய்­வுப் பிரிவு மேற்­கொண்ட ஆய்­வின்­போது கிடைத்த தக­வல்­களை தெற்­கா­சிய வர­லாற்று, கலாச்­சார சஞ்­சிகை வெளி­யிட்­டுள்­ளது.

இரு தரப்­பி­ன­ரும் வெளி­யிட்ட பொய்­யான தக­வல்­கள் வாட்ஸ் அப் உள்­ளிட்ட செய­லி­கள் மூல­மாக மட்­டு­மல்­லா­மல் பல்­வேறு சட்­ட­பூர்வ அமைப்­பு­கள், நிறு­வ­னங்­கள் மூல­மா­க­வும் தொடர்ந்து இணை­யத்­தில் பரப்­பப்­பட்­ட­தாக அந்த ஆய்வு தெரி­விக்­கிறது.

"அனைத்து பெரிய கட்­சி­க­ளுமே இணை­யம் வழி தவ­றான தக­வல்­களை பரப்பி உள்­ளன. தங்­க­ளு­டைய தேர்­தல் வியூ­கத்­தின் ஓர் அங்­க­மாக இந்த நட­வ­டிக்­கையை அவை மேற்­கொண்­டன.

எதிர்க்­கட்­சி­கள் குறித்து பொய்­யான தக­வலை வெளி­யிட்ட அதே வேளை­யில், தங்­கள் மீது நல்­லெண்­ணம் ஏற்­படும் வகை­யில் நேர்­மறை தக­வல்­க­ளை­யும் நல்ல கருத்­து­க­ளை­யும் வெளி­யிட அவை தவ­ற­வில்லை," என்று ஆய்­வில் ஈடு­பட்­ட­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இத்தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.