இலவசத் திட்டம் கூடாது: மோடி கருத்துக்கு முதல்வர்கள் எதிர்ப்பு

இலவசத் திட்டம் கூடாது: மோடி கருத்துக்கு முதல்வர்கள் எதிர்ப்பு

2 mins read
a6090b89-465c-4e3b-b974-ccd9d7df0502
-

'மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும் சதியில் ஈடுபடுகிறது மத்திய அரசு'

புது­டெல்லி: இல­வ­சத் திட்­டங்­கள் குறித்து பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்ள கருத்­துக்கு மாநில முதல்­வர்­கள் மத்­தி­யில் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இல­வ­சத் திட்­டங்­க­ளால் நாட்­டின் ஒட்­டு­மொத்த வளர்ச்சி பாதிக்­கப்­படும் என பிர­த­மர் மோடி அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார்.

இதற்கு டெல்லி, பஞ்­சாப், ராஜஸ்­தான், தெலுங்­கானா மாநி­லங்­க­ளின் முதல்­வா்­கள் பிர­த­ம­ரின் கருத்­துக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளனா்.

இல­வசக் கல்­வி­யும் சுகா­தா­ர­மும் இல­வசத் திட்­டங்­கள் அல்ல என்று டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

கல்­வி­யும் சுகா­தா­ர­மும் இருந்தால்­தான் வறு­மையை ஒரே தலை­மு­றை­யில் ஒழிக்க முடி­யும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாம் ஒன்­றி­ணைந்து ஆங்கி­லே­யரை வெளி­யேற்­றி­னோம். அதே­போல, நாம் ஒன்­றி­ணைந்­தால் இந்­தி­யாவை உல­கின் முன்­னணி நாடாக மாற்­ற­லாம்," என்றாா் முதல்வர் கெஜ்­ரி­வால்.

இதற்­கி­டையே, பஞ்­சாப் மாநிலத்­தில் சுதந்­திர தினத்­தன்று தேசி­யக்­கொ­டியை ஏற்றி வைத்து உரை­யாற்­றிய முதல்வா் பக­வந்த் மான், நலத் திட்­டம் என்ற பெயரில் பொது­மக்­க­ளின் பணம் அவர்­களுக்கே திருப்பி அளிக்­கப்­படு­கிறது என்­றார்.

"இது இல­வ­சம் அல்ல. பிர­தமா் தனது நண்­பா்­க­ளின் ரூ.10 லட்­சம் கோடி கடனைத் தள்­ளு­படி செய்­கிறாா். அதற்கு என்ன அா்த்தம்?" எனக் கேள்வி எழுப்­பினாா் முதல்­வர் பக­வந்த் மான்.

பொது­மக்­க­ளின் நலன்களைப் பேணிக்­காப்­பதே மாநில அரசின் தலை­யாய கடமை என்று ராஜஸ்தான் முதல்­வர் அசோக் கெலாட் கூறி­யுள்­ளார்.

வளா்ந்த நாடு­களில் ஏழை­க­ளுக்­கும் முதி­யோ­ருக்­கும் வாராந்­திர நிதி­யு­தவி அளிக்­கப்­ப­டு­வ­தா­கச் சுட்டிக்­காட்டி உள்ள அவர், பொது­ந­லத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது ஒவ்வோா் அர­சின் கடமை என்­றார்.

நலத்திட்­டங்­களை முறை­யாக நிறை­வேற்­றாத மத்­திய அரசு, மாநில அர­சு­கள் இல­வ­சங்­களை வழங்கு­வ­தா­கக் கூறி அவ­ம­திப்­ப­தாக தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் கூறி­யுள்­ளார். மத்­திய அரசு, அதி­கா­ரத்தை மத்­தி­யில் குவித்து கூட்­டாட்­சித் தத்­து­வத்­தை சிதைப்­ப­தா­க­வும் அவர் சாடி உள்­ளார்.

"மாநி­லங்­களை நிதி­ரீ­தி­யாக பல­வீ­னப்­ப­டுத்­தும் சதிச் செயல்­களில் மத்­திய அரசு ஈடு­ப­டு­கிறது. மத்திய அரசு ஈட்­டும் வரி வரு­வாயில் மாநிலங்­க­ளுக்கு 41 விழுக்­காடு அளிக்க வேண்­டும். ஆனால் வெறும் 29.6 விழுக்­காட்டை மட்­டுமே அளிக்­கிறது," என்­றார் சந்­தி­ர­சே­கர ராவ்.

மத்­திய அர­சா­னது கூட்­டாட்­சி­யின் மதிப்­பிற்கு தீங்­கி­ழைப்­ப­தா­க­வும் உட்­கார்ந்­தி­ருக்­கும் மரக்­கி­ளை­யையே வெட்­டு­வது போன்று மத்­திய அரசு செயல்­ப­டு­வ­தா­க­வும் அவர் மேலும் சாடி உள்ளார்.