குஜராத்தில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்தில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
ca7f1bea-ac19-4c3d-9368-09c5bedfac9d
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் ரக­சிய இடத்­தில் இயங்கி வந்த போதைப்­பொ­ருள் ஆலை­யைக் கண்­டு­பி­டித்து ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள போதைப்­பொருளை காவல்­து­றை­யி­னர் கைப்­பற்றி உள்ளனர்.

இது தொடர்­பாக கிரி­ராஜ் தீக்‌ஷித் என்­ப­வர் கைதாகி உள்­ளார்.

கடந்த 3ஆம் தேதி­யன்று மும்பை­யில் உள்ள நாலச்­சோப்ரா என்ற இடத்­தில் போதைப்­பொருள் மறைத்து வைக்­கப்பட்­டுள்­ள­தாக காவல்­து­றைக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது. அதன்­பே­ரில் அங்கு மும்பை காவல்துறை அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

அப்­போது ஒரு வீட்­டில் போதைப்­பொ­ருள் குவிந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது. ஆறு பேர் அங்கு வேலை பார்த்து வந்­த­னர்.

அங்­கி­ருந்த 700 கிலோ போதைப்­பொ­ரு­ளைக் கைப்­பற்றி, ஆறு பேரைக் கைது செய்த காவல்­துறை­யி­னர், பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொரு­ளின் மதிப்பு ரூ.1,400 கோடி என மதிப்­பிடப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­த­னர்.

கைதா­ன­வர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது, குஜ­ராத் மாநி­லத்­தில் இயங்­கும் போதைப்­பொ­ருள் ஆலை­யில் இருந்­து­தான் மும்­பை­யில் உள்ள வியா­பா­ரி­க­ளுக்கு போதைப்­பொருள் வரு­கிறது என்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து மும்பை தனிப்­படை­யி­னர் குஜ­ராத் சென்று, அங்­குள்ள போதைப்­பொ­ருள் ஆலை­யில் சோதனை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது 513 கிலோ எடை­உள்ள எம்டி வகை போதைப்­பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இதன் மதிப்பு ரூ.1,026 கோடி ஆகும்.