பண மோசடி: சிக்கினார் நடிகை ஜேக்குலின்

புது­டெல்லி: அர­சி­யல் தர­கர் சுகேஷ் சந்­தி­ர­சே­க­ரு­டன் நெருக்­க­மாக இருந்த நடிகை ஜேக்­கு­லின் பெர்­னாண்­ட­சுக்கு, தொழி­ல­தி­பர் மனை­வியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்­கில் தொடர்பு உள்­ள­தாக மத்­திய அம­லாக்­கத்­துறை குற்­றம்­சாட்டி உள்­ளது.

இதை­ய­டுத்து இந்த வழக்­கின் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் அவ­ரது பெயர் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­யல் தலை­வர்­கள், அரசு உய­ர­தி­கா­ரி­கள், ஆட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளு­டன் தமக்கு தொடர்­புள்­ள­தா­கக் கூறி, தொழி­ல­தி­பர்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­கள் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரை­யும் ஏமாற்றி கோடிக்­க­ணக்­கில் பணம் பறித்­துள்­ளார் சுகேஷ் சந்­தி­ர­சே­கர். அவர் மீது 32 வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன.

சுகே­ஷுக்­கும் இந்தி நடிகை ஜேக்­கு­லி­னுக்­கும் நெருக்­கம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. அவ­ருக்கு பல கோடி ரூபாய் மதிப்­புள்ள பரி­சு­களை அள்­ளிக்­கொ­டுத்­த­து­டன், அவ­ரது விமா­னப் பய­ணம் உள்­ளிட்ட செலவு­களை சுகேஷ் ஏற்­றுள்­ளார்.

இந்­நி­லை­யில் சிறை­யில் அடைக்­கப்­பட்ட சுகேஷ் அங்­கி­ருந்­த­ப­டியே தொழி­ல­தி­பர் ஒரு­வ­ரது மனை­வியை மிரட்டி ரூ.215 கோடி பறித்­த­தாக பண மோசடி வழக்­குப் பதி­வா­னது. அதன் விசா­ர­ணை­யின் முடி­வில், அவர் மீது குற்­றப்­பத்­தி­ரிகை தாக்க­லா­னது. இப்­போது ஜேக்­கு­லின் பெய­ரை­யும் குற்­றப்பத்­தி­ரி­கை­யில் சேர்த்­துள்­ள­னர். அவருக்கு எதிரான ஆதா­ரங்­கள் உள்­ள­தாக அம­லாக்­கத்­துறை தெரி­வித்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!