(காணொளி) கலைஞர்களுடன் தெருவில் புலியாட்டம் ஆடி மனதைக் கொள்ளை அடித்த சிறுமி

(காணொளி) கலைஞர்களுடன் தெருவில் புலியாட்டம் ஆடி மனதைக் கொள்ளை அடித்த சிறுமி

1 mins read
a2887cd7-55fe-4fc4-8e75-4d19da9c5b5b
-

நாட்டுப்புறக் கலைகளில் பல உண்டு. குறிப்பாக நாட்டுப்புறக் கலைஞர்கள் பாரம்பரிய கலைகளை இன்றும் இந்தியாவின் பட்டிதொட்டிகளில் படைத்து வருகின்றனர்.

அவ்வகையில் கர்னாடகாவின் உடுப்பி பகுதியில் புலியாட்டம் நடைபெற்றது. புலியாட்டம் தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் அதிக பிரசித்தி பெற்ற நடனங்களில் ஒன்று. உடுப்பியில் துர்கை அம்மனுக்காக நவராத்திரி விழாவின்போது நடைபெறும் விழாவில் புலியாட்டம் ஆடுவது வழக்கம்.

அப்போது ஆட்டம் முடிந்ததும் கலைஞர் ஒருவருக்கு ஒரு பெண் மரியாதை செலுத்துகிறார். அவருடன் இருந்த சிறுமி ஒருவர் அப்போது அந்த புலியாட்டக் கலைஞருடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறாள். அவளது நடனம் பார்ப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.