(காணொளி) கண் இமைக்கும் நேரத்தில் பாம்பிடமிருந்து மகனைக் காப்பாற்றிய தாய்

(காணொளி) கண் இமைக்கும் நேரத்தில் பாம்பிடமிருந்து மகனைக் காப்பாற்றிய தாய்

1 mins read
a792c4c2-445e-4202-8d08-210053f00565
-

தங்கள் வீட்டின் வெளியே இருந்த பெரிய பாம்பு ஒன்றிடம் இருந்த தமது மகனைத் தக்க தருணத்தில் காப்பாற்றியுள்ளார் அவனது தாய்.

அவரது செயல் அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியைக் கண்ட அனைவரும் தாயின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடகாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒரு வீட்டின் வெளியே படிகளின் கீழ் நாகப்பாம்பு போன்று தெரிகின்ற ஒரு பாம்பு ஊர்ந்து வந்துள்ளது. அது தெரியாமல் வீட்டின் வெளியே தாயும் மகனும் வந்தனர்.

மகன் முதலில் படிகளில் இறங்க பாம்பு மகனின் திடீர் வருகையால் படமெடுக்கத் தொடங்கியது.

அதைக் கவனித்த தாய் உடனே மகனைப் பிடித்து பின்வாங்குகிறார். பாம்பும் அவர்களைப் பின்தொடராமல் ஊர்ந்து சென்றுவிடுகிறது.