311 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி: இந்தியா சாதனை

311 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி: இந்தியா சாதனை

2 mins read
eafbcbcd-43f8-4267-a60c-f9d7f4fdaa9e
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் 2021-2022 பயிர் ஆண்­டில் உணவு தானிய உற்­பத்தி ஏறத்­தாழ 311 மில்­லி­யன் டன்­னாக உயர்ந்­துள்ளது.

இது கடந்­த ஆண்டைவிட அதிகம் என்று இந்­திய வேளாண் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நாட்­டில் 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரைப்­பட்ட 2021-22 பயிர் ஆண்­டுக்­கான நான்­கா­வது முன்­னு­ரைப்பை அமைச்சு வெளி­யிட்­டது.

இந்த ஆண்டு ஜூனில் முடிந்த பயிர் ஆண்­டில், நாட்­டின் ஒட்­டு­மொத்த உணவு தானிய உற்­பத்தி 311 மில்­லியன் டன்­க­ளாக இருக் கும். கடந்த பயிர் ஆண்­டில் இது சுமார் 310 மில்­லி­ய­னாக இருந்­தது என்று அது கூறியது.

அதே­போல், 2021-2022ல் நாட்­டின் மொத்த கோதுமை உற்­பத்தி 3% குறைந்து 100.68 மில்­லி­யன் டன்­க­ளாக இருக்­கும்.

வட மாநி­லங்­க­ளான பஞ்­சாப், அரி­யானா­வில் வெப்ப அலை கார­ண­மாக பயிர்­கள் கரு­கி­ய­தால் கோதுமை உற்­பத்தி குறைந்­துள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டுள்து.

அரிசி உற்­பத்தி 130.29 மில்­லி­யன் டன்­க­ளாக இருக்­கும். இது, முந்­தைய ஆண்­டில் 120.43 மில்­லி­யன டன்­க­ளாக இருந்­தது.

2020-21 பயிர் ஆண்­டில் 250 மில்­லி­யன் டன்­க­ளாக இருந்த பருப்பு உற்­பத்தி, இந்தப் பயிர் ஆண்டில் 270 மில்­லி­யன் டன்­னாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

எண்­ணெய் வித்­துக்­க­ளின் உற்­பத்தி முந்­தைய ஆண்­டில் 30.59 மில்­லி­யன் டன்­க­ளாக இருந்த நிலை­யில், 2021-22 பயிர் ஆண்­டில்­ அது 30.76 மில்­லி­யன் டன்­க­ளாக இருக்­கும். கரும்பு உற்­பத்தி முந்­திய ஆண்­டில் 400.53 லட்­சம் டன்­க­ளாக இருந்த நிலை­யில், இந்த ஆண்­டில் 430.18 மில்­லி­யன் டன்­க­ளாக இருக்கும் என்று அமைச்சு முன்­னு­ரைப்­பில் தெரி­வித்­துள்­ளது.