படகில் ஆயுதங்கள் சிக்கின

படகில் ஆயுதங்கள் சிக்கின

2 mins read
70aedb5b-acf8-4919-88b3-86a997804d8a
கடலில் மிதந்து கொண்டிருந்த ஓரு படகில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். படம்: இந்திய ஊடகம் -

மகாராஷ்டிரா மாநிலத்தில் விழிப்புநிலை; 2008 சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க கோரிக்கை

மும்பை: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் ரெய்­காட் என்ற மாவட்­டம் முழு விழிப்புநிலை­யில் வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்த மாநி­லத்­தைச் சேர்ந்த ஸ்ரீவர்­தன் கடற்­க­ரைப் பகு­தி­யில் அதி­வே­கப் படகு ஒன்­றில் இருந்து மூன்று ஏகே-47 துப்­பாக்­கி­க­ளை­யும் குண்­டு­க­ளை­யும் அதி­கா­ரி­கள் கைப்­பிற்­றி­னர். அந்­தப் படகு கைவிடப்­பட்டு கடலில் மிதந்தது.

இதை­ய­டுத்து அந்த மாவட்­டம் முழு விழிப்புநிலை­யில் வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

தனி­யார் பாது­காப்பு நிறு­வ­னம் ஒன்­றின் முத்­தி­ரை­யு­டன் இருந்த அந்த ஆயு­தங்­களை உள்­ளூர் மக்கள் அதி­காலை 8 மணிக்குக் கண்­ட­தாக ரெய்­காட் மாவட்ட ஆட்­சி­யர் மகேந்­திரா கல்­யாண்­கர் கூறி­னார். அதை­ய­டுத்து அந்த மாவட்­டத்­தில் உள்ள எல்லா காவல்­துறை சோத­னைச்­சா­வ­டி­க­ளி­லும் முழு விழிப்­பு­நிலை அமல்­ப­டுத்­தப்­பட்­டது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மும்­பை­யில் கடந்த 2008ஆம் ஆண்­டி­லும் அதற்கு முன் 1993ஆம் ஆண்­டி­லும் நிகழ்ந்த பயங்­க­ர­வா­தச் சம்­ப­வங்­க­ளைப் போன்று மறு­ப­டி­யும் ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­து­வி­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் மத்­திய, மாநில அமைப்­பு­கள் விரைந்து செய­லில் இறங்க வேண்­டும் என்று ஸ்ரீவர்­தன் தொகு­தி­யைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தாக்­கரே கோரிக்கை விடுத்­தார்.

இத­னி­டையே, அந்­தப் படகு ஆஸ்­தி­ரே­லி­யர் ஒரு­வ­ருக்­குச் சொந்தம் என்­றும் அது மஸ்­கட் வழி­யாக ஐரோப்பா சென்­று­கொண்டு இருந்தபோது வழி­யில் கட­லில் பரு­வ­நிலை கார­ண­மாக அது கரைக்கு வர இய­லா­மல் மிதக்­க­ வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தா­க­வும் மகா­ராஷ்­டிரா மாநில உள்­துறை அமைச்­சர் தேவேந்­திரா பட்­னா­விஸ் கூறி­னார்.

இதுவரை பயங்கரவாத சந்தேகம் எதுவும் எழவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், இருந்­தா­லும் முழு­வி­ழிப்புநிலை தொடர்­வ­தாக தெரி­வித்­தார்.