தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் மிக மாசுபட்ட நகர் புதுடெல்லிதான்

1 mins read
f11c1e6f-701f-40c3-843d-9f3a74f376f6
-

புது­டெல்லி: உல­கி­லேயே காற்­றில் நுண்துகள்­கள் அதி­கம் கலந்து படு­மோ­ச­மாக மாசு­பட்டு இருக்­கும் நக­ரம் இந்­தி­யா­வின் புது­டெல்­லி­ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'உடல்­நல பாதிப்­புப் பயி­ல­கம்' என்ற அனைத்­து­லக அமைப்பு, உல­கில் காற்று மாசு அதி­க­மாக உள்ள நக­ரங்­க­ள் பட்­டி­யலை வெளி­யிட்டது.­

ஆய்­வுக்கு மொத்­தம் 7,000க்கும் மேற்­பட்ட நக­ரங்­கள் எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் பிஎம் 2.5 மற்­றும் என்ஓ2 ஆகிய தீங்கு விளை­விக்­கும் மாசு­த் துகள்கள், அந்த நகர்­க­ளின் காற்­றில் எந்த அளவுக்கு உள்ளன என்­பது ஆரா­யப்­பட்டதாக­வும் அது கூறி­யது.

அதிக­ மாசு­ கலந்துள்ள காற்­றைக் கொண்ட முதல் 10 நகர்­களில் 2வது இடத்­தில் கோல்­கத்தா இருக்­கிறது. இதில், கானா (நைஜீ­ரியா), லீமா (பெரு), டாக்கா (பங்­ளா­தேஷ்), ஜகார்த்தா (இந்­தோ­னீ­சியா), லாகோஸ் (நைஜீ­ரியா), கராச்சி (பாகிஸ்­தான்), பெய்ஜிங் (சீனா), அக்ரா (கானா) ஆகிய நகரங்­களும் உள்­ளன.

என்ஓ2 ரக மாசு காற்­றில் அதி கம் உள்ள நக­ர்களில் ஷாங்­காய், மாஸ்கோ, டெஹ்­ரான் (ஈரான்), செயின்ட் பீட்­டர்ஸ்­பர்க், பெய்­ஜிங், கெய்ரோ (எகிப்து), அஸ்­க­பத் (துர்க்­மெ­னிஸ்­தான்), மின்ஸ்க் (பெலா­ரஸ்), இஸ்­தான்­புல் (துருக்கி), ஹோ சி மின் சிட்டி (வியட்­நாம்) முதல் 10 இடங்­களில் உள்­ள­ன.