பாஜக குழுக்களில் மாற்றம்; வானதிக்கு ஏற்றம்

புது­டெல்லி: மத்­தி­யில் ஆளும் பாஜ­க­வின் அதிக அதி­கா­ரம் கொண்ட அமைப்­பான ஆட்­சி­மன்றக்­கு­ழு­வில் மாற்­றங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

கட்­சி­யின் கொள்­கை­கள் போன்­ற­வற்­றில் முக்­கிய முடி­வு­களை எடுக்­கும் அந்த அமைப்­பில் இருந்து பாஜக மூத்த தலை­வர்­க­ளான மத்திய அமைச்­சர் நிதின் கட்­காரி­யும் மத்­தி­யப் பிர­தேச மாநில முதல்வர் சிவ­ராஜ் சிங் சவு­கா­னும் நீக்­கப்­பட்டு உள்­ள­னர்.

அதே நேரத்­தில், கர்­நா­டக முன்னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா உள்­ளிட்ட ஆறு புது­மு­கங்­க­ளுக்கு ஆட்­சி­மன்­றக்­ கு­ழு­வில் இடம் தரப்­பட்­டுள்­ளது.

கட்­சி­யின் மத்­திய தேர்­தல் குழு­வி­லும் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதில் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் துணை முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ், மத்­திய அமைச்­சர் பூபேந்­தர் யாதவ், ஓம் மாத்­தூர் (ராஜஸ்­தான்), பாஜக மக­ளிர் அணி தலை­வ­ரான தமிழ்­நாட்­டின் வானதி சீனி­வா­சன் (படம்) ஆகி­யோர் புதி­தாக சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

மத்­திய தேர்­தல் குழு­வில் முன்­னாள் மத்­திய அமைச்சர் ஷா நவாஸ் உசே­னும், ஜூவல் ஓர­மும் இப்போது இடம்பெறவில்லை.

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு ஏப்­ர­லில் அடுத்த நாடாளு­மன்றத் தேர்­தல் நடக்க உள்­ளது.

அதற்கு பாஜக இப்­போதே தயா­ரா­கத் தொடங்கி உள்­ளது என்­ப­தற்குக் கட்­சி­யில் செய்­யப்­படு­கிற அதி­ரடி மாற்­றங்­கள் சான்றாக அமைந்­து உள்­ள­தாக அரசி­யல் நோக்­கர்­கள் பலரும் கரு­து­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!