13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க, விற்க திடீர் தடை

மாநில மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,085 கோடி நிலுவைத்தொகை செலுத்தவில்லை

புது­டெல்லி: தமி­ழ­கம் உள்­ளிட்ட 13 மாநி­லங்­கள் மின்­சா­ரம் வாங்­க­வும் விற்­க­வும் மத்­திய அரசு திடீர் தடை விதித்­துள்­ளது.

இம்­மா­நி­லங்­களில் உள்ள மின் பகிர்­மான நிறு­வ­னங்­கள், மின் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கில் பாக்கி வைத்­துள்­ளன.

அந்த வகை­யில், இம்­மா­நி­லங்­கள் ரூ.5,085 கோடி செலுத்த வேண்டி உள்­ள­தா­க­வும் நிலு­வைத் தொகையை அளித்த பிறகே மின்­சா­ரம் வாங்க, விற்க முடி­யும் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆக அதி­க­மாக, தெலுங்­கானா மாநி­லம் மின் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு ரூ.1,381 கோடி செலுத்த வேண்­டி­யுள்­ளது. இப்­பட்­டி­ய­லில் இரண்­டா­வது இடத்­தில் உள்ள தமி­ழ­கம், ரூ.926 கோடி செலுத்த வேண்­டி­யுள்­ள­தாக மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், ராஜஸ்­தான் ரூ.501 கோடி­யும் ஜம்மு காஷ்­மீர் ரூ.435 கோடி­யும் ஆந்­திரா ரூ.413 கோடி­யும் மகா­ராஷ்­டிரா ரூ.382 கோடி­யும் மத்­தி­யப் பிர­தே­சம் ரூ.229 கோடி­யும் ஜார்­கண்ட் ரூ.215 கோடி­யும் தர வேண்­டி­யுள்­ளது.

பீகார், மணிப்­பூர், சட்­டீஸ்­கர், மிசோ­ரம் ஆகிய மாநி­லங்­களும் நிலு­வைத் தொகை­களை இது­வரை செலுத்­த­வில்லை.

இதை­ய­டுத்து, மத்­திய அரசு விதித்­துள்ள தடை நேற்று முன்­தி­னம் இரவு முதல் அம­லுக்கு வந்­தது.

தமி­ழ­கம், ஆந்­திரா, தெலுங்­கானா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­க­ளின் நிலு­வைத்­தொகை மிக அதி­க­மாக உள்­ள­தால் அவற்­றுக்கு மத்­திய அரசு அப­ரா­த­மும் விதித்­துள்­ளது. சட்ட விதி­க­ளின் அடிப்­ப­டை­யில், இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மத்­திய மின்­சார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான மின்­ப­கிர்­வில் மத்­திய அரசு தலை­யி­டக் கூடாது என சில மாநி­லங்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், மாநி­லங்­களில் உள்ள மின்­ப­கிர்­மான நிறு­வ­னங்­க­ளின் நிலு­வைத்­தொ­கை­கள் கோடிக்­க­ணக்­கில் இருப்­ப­தால், மத்­திய அரசு இவ்­வி­வ­கா­ரத்­தில் தலை­யிட வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த திடீர் தடை கார­ண­மாக, 13 மாநி­லங்­க­ளி­லும் மின் தட்­டுப்­பாடு ஏற்­ப­டக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு, நிலக்­க­ரிப் பற்­றாக்­கு­றை­யால் சில மாநி­லங்­களில் மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது. அதன் கார­ண­மாக, மாநி­லங்­களில் பெரும்­பா­லான பகு­தி­கள் இரு­ளில் மூழ்­கின.

இதற்கு மத்­திய தொகுப்­பில் இருந்து போது­மான நிலக்­கரி அனுப்­பப்­ப­ட­வில்லை என பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­கள் குற்­றம்­சாட்­டின. இப்­போது மத்­திய அரசு 13 மாநி­லங்­க­ளுக்குத் தடை விதித்­தி­ருப்­ப­தும் விவா­தப்­பொ­ரு­ளாகி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!