11 பேர் விடுதலை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

அக­ம­தா­பாத்: பில்­கிஸ் பானு பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் தண்­டனை பெற்ற 11 பேரும் பிரா­ம­ணர்­கள் என்­றும் நல்ல பழக்­க­வ­ழக்­கங்­கள் உடை­ய­வர்­கள் என்­றும் பாஜக எம்­எல்ஏ ராகுல்ஜி என்­ப­வர் கூறி­யி­ருப்­பது சர்ச்­சையை ஏற்­படுத்தி உள்­ளது.

குஜ­ராத் கல­வ­ரத்­தின்­போது கர்ப்­பி­ணிப் பெண்­ணான பில்­கிஸ் பானு பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­னார். இது தொடர்­பாக கைது செய்­யப்­பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், 11 பேரை­யும் குஜ­ராத் அரசு அண்­மை­யில் விடு­தலை செய்­வ­தாக அறி­வித்­தது. இதை­ய­டுத்து, எதிர்க்­கட்­சி­கள் குஜ­ராத் அர­சைக் கடு­மை­யாக விமர்­சித்துள்­ளன.

11 பேருக்­கும் சிறை வாச­லில் ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கி அவர்­க­ளது குடும்­பத்­தார் வர­வேற்­ற­னர்.

இந்­நி­லை­யில், தவ­றான நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் 11 பேரும் தண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாஜக எம்­எல்ஏ ராகுல்ஜி தெரி­வித்­துள்­ளார். அவ­ரது பேச்­சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

"பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றம் புரிந்­த­வர்­களை ஆத­ரிப்­பது என்­பது பாஜ­க­வின் அற்ப மன­நி­லையை வெளிப்­ப­டுத்­து­கிறது. இது­போன்ற அர­சி­ய­லில் ஈடு­பட வெட்­க­மாக இல்­லையா," என்று பிர­த­மர் மோடிக்கு காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

பாஜக தரம் தாழ்ந்த அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தா­க­வும் அக்­கட்­சி­யின் குற்­ற­வா­ளி­களை ஆத­ரிப்­பது புதி­தல்ல என்­றும் தெலுங்­கானா ராஷ்ட்­ரிய சமிதி கட்சி விமர்­சித்­துள்­ளது.

இதே போல் திரி­ணா­மூல் காங்­கி­ர­சும் இந்த விவ­கா­ரத்­தில் பாஜக தலை­மை­யைக் கடு­மை­யா­கச் சாடி­உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!