பழனிவேல் தியாகராஜன்: தமிழக மக்கள் முடிவு செய்வர்

சென்னை: மத்­திய அர­சின் நிதிப்­பற்­றாக்­கு­றை­யை­விட தமி­ழ­கத்­தின் நிதிப்­பற்­றாக்­குறை குறை­வா­னது என்று தமி­ழக நிதி அமைச்­சர் பிடி­ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­ய­லைப்­புச் சட்­டத்­தின்­படி, மக்­க­ளின் பணம் எவ்­வாறு செல­வி­டப்­பட வேண்­டும் என்­பதை முடிவு செய்­யும் அதி­கா­ரம் உச்ச நீதி­மன்­றம் மட்­டு­மல்­லா­மல், வேறு எந்த நீதி­மன்­றத்­துக்­கும் இல்லை என்று அவர் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்­ற­போது குறிப்­பிட்­டார்.

மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளைக் கொண்ட சட்­ட­மன்­றங்­க­ளுக்கு மட்­டுமே அந்த அதி­கா­ரம் உள்­ளது என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

"இல­வ­சங்­கள் வழங்­கப்­ப­டு­வது தீய செயல் எனில், அதி­முக அர­சின் இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்கு ரூ.25 ஆயி­ரம் மானி­யம் வழங்­கும் திட்­டத்­தைத் தொடங்கி வைக்க பிர­த­மர் டெல்­லி­யில் இருந்து சென்­னைக்­குப் பறந்­து­வந்­தது ஏன்," என அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் கேள்வி எழுப்­பி­னார்.

நாட்­டில் உள்ள அனைத்து மாநி­லங்­க­ளு­ட­னும் ஒப்­பி­டும்­போது தனி­ந­பர் வரு­வாய், மனி­த­வள மேம்­பாடு, சமூக மேம்­பாடு, உயர் கல்­வியை மேற்­கொள்­ப­வர்­கள் விகி­தம் ஆகி­ய­வற்­றில் தமி­ழ­கம் முதல் இடத்­தில் உள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அமைச்­சர், கடன் பெறும் வரம்­பை­விட தமி­ழ­கத்­தின் நிதிப்­பற்­றாக்­குறை குறை­வா­கவே உள்­ளது என்­றார்.

"உண்மை நில­வ­ரம் இப்­படி இருக்­கும்­போது சிறப்­பா­கப் பணி­யாற்­று­வது எப்­படி என்­பதை எங்­க­ளுக்கு யாரோ ஏன் சொல்­லித்­தர வேண்­டும்? நாங்கள் சரியாகப் பணியாற்றுகிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!