தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனில் நேரடி வகுப்புகள் தொடக்கம்: மாணவர்கள் பீதி

1 mins read
50f35d17-13f8-4532-b5cd-acb371adf292
-

புது­டெல்லி: போர்ச் சூழ­லுக்கு மத்­தி­யில் அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்­பு­க­ளைத் தொடங்­கு­வது என உக்­ரே­னில் உள்ள கல்வி நிறு­வ­னங்­கள் முடிவு செய்­தி­ருப்­ப­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து, அங்­குள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் படித்து வந்த மாண­வர்­கள் கவ­லை­யில் மூழ்கி உள்­ள­னர். மீண்­டும் அங்கு செல்­லும் பட்­சத்­தில், தங்­க­ளுக்­கான பாது­காப்பு கிடைக்­குமா எனும் அச்­சம் மாண­வர்­கள் மத்­தி­யில் நில­வு­கிறது.

உக்­ரேன், ரஷ்யா போர் கார­ண­மாக சுமார் 20 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட இந்­திய மாண­வர்­கள் நாடு திரும்­பி­விட்­ட­னர். தற்­போது அவர்­க­ளுக்கு உக்­ரேன் கல்வி நிறு­வ­னங்­கள் இணை­யம் வழி வகுப்­பு­கள் நடத்தி வரு­கின்­றன.

நாடு திரும்­பிய மாண­வர்­க­ளால் இந்­திய மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் சேர முடி­யாத நிலை காணப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அடுத்த மாதம் உக்­ரே­னில் நேரடி வகுப்­பு­கள் தொடங்­கும் என்­றும் மருத்­து­வப் படிப்­பு­க­ளுக்­கான தேர்வு அக்­டோ­பர் மாதம் நடத்­தப்­படும் என்­றும் தக­வல் வெளி­யாகி உள்­ளது. இது தொடர்­பாக மாண­வர்­க­ளுக்கு அங்­குள்ள கல்வி நிறு­வ­னங்­கள் தக­வல் தெரி­வித்­துள்­ளன.

உக்­ரே­னில் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­தம் இல்­லாத நிலை­யில், அங்கு செல்ல அச்­ச­மாக உள்­ளது என மாண­வர்­களில் பலர் தெரி­வித்­துள்­ள­னர்.

அதே­ச­ம­யம், அங்கு செல்­லா­விட்­டால் தங்­கள் கல்வி வீணா­கி­வி­டும் என்ற கவ­லை­யும் மாண­வர்­க­ளுக்கு உள்­ளது.