பாஜகவின் தந்திர அரசியல்: சாடும் காஷ்மீர் எதிர்க்கட்சிகள்

ஸ்ரீந­கர்: ஜம்மு காஷ்­மீ­ரில் சட்­டப்­பேரவைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை தேர்­தல் ஆணை­யம் மேற்­கொண்டு வரு­கிறது.

இதை­ய­டுத்து, அங்கு தற்­கா­லி­க­மாக குடி­யி­ருப்­ப­வர்­களும் தேர்­த­லில் வாக்­க­ளிக்­க­லாம் என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. இதன் மூலம் காஷ்­மீ­ரில் தங்கி பணி­யாற்­றும் வெளி­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் தங்­கள் பெய­ரைச் சேர்க்க விண்­ணப்­பிக்­க­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் ஜம்மு காஷ்­மீ­ரில் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக தங்­கி­யுள்ள 25 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இணைய வாய்ப்­புள்­ள­தாக கூறப்­படு­கிறது.

எனி­னும், எதிர்க்­கட்­சி­கள் இந்த அறி­விப்பை வர­வேற்­க­வில்லை.

காஷ்­மீர் முன்­னாள் முதல்­வ­ரான உமர் அப்­துல்லா, மத்­திய அரசு வெளி­மா­நில வாக்­கா­ளர்­களை காஷ்­மீ­ரில் இறக்­கு­மதி செய்­வ­தா­கச் சாடி­யுள்­ளார்.

ஜம்மு காஷ்­மீர் மக்­கள் பாஜ­க­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்­கள் என்­ப­தால்­தான், மத்­திய அரசு புதிய அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது என்­றும் இதன் மூலம் அக்­கட்­சி­யால் வெற்றி பெற முடி­யாது என்­றும் உமர் அப்­துல்லா கூறி­யுள்­ளார்.

ஜம்மு காஷ்­மீ­ரைத் தொடர்ந்து ஆள வேண்­டும் என்­ப­தற்­காக பாஜக தந்­திர அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தாக முன்­னாள் முதல்­வர் மெக­பூபா முஃப்தி கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!