இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா வட்டாரத்தில் உள்ள பங்கி பிஹாரி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது இருவர் மாண்டனர்.
பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை (19 ஆகஸ்ட்) பின்னிரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
பின்னிரவு இரண்டு மணியளவில் ஆலயத்தில் இருந்த சிலர் மயங்கி விழுந்தனர்.
அதனால் நிலைமையைச் சமாளிக்க மக்கள் உள்ளே வருவதை காவல்துறையினர் தடுக்கவேண்டிய சூழல் உருவானது.

