தொடரும் கடும் மழையால் இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 15 பேர் மாண்டுவிட்டனர், எட்டு பேரைக் காணவில்லை.
கங்கிரா வட்டாரத்தில் பத்தான்கோட்டிற்கும் ஜோகிந்தர்நகருக்கும் இடையே ஓடும் ரயில் பாதையில் அமைந்திருக்கும் சக்கி பாலம் உட்பட இரண்டு பாலங்கள் இடிந்துவிழுந்தன.
சண்டிகர்-மனாலி தேசிய விரைவுச்சாலை உட்பட பல சாலைகளின் வழி பயணம் செய்யமுடியாத நிலை உருவெடுத்துள்ளது.

