வடகிழக்குத் திறன் நிலையம்: கட்டுப்படியாகும் கட்டணத்தில் பயிற்சி

வடகிழக்குத் திறன் நிலையம்: கட்டுப்படியாகும் கட்டணத்தில் பயிற்சி

2 mins read
b79b73d8-0ef7-4b88-b558-6b41ea662bb1
கவுஹாத்தி நகரில் அமைந்திருக்கும் வடகிழக்குத் திறன் நிலையம் (மேல் படம்), கைவிரல் நகங்களைக் கலைநயத்துடன் அழகுபடுத்தும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அழகு-ஆரோக்கியப் பிரிவில் பயிலும் மாணவர்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்விச் சேவையின் ஆதரவில் திறனாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் நிலையம்

கவுஹாத்தி: வட­கி­ழக்கு மாநி­ல­மான அசா­மின் ஆகப் பெரிய நக­ர­மான குவ­ஹாத்­தி­யில் அமைந்­துள்­ளது வட­கி­ழக்­குத் திறன் நிலை­யம்.

'ஐடீஸ்' எனப்­படும் சிங்­கப்­பூ­ரின் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கக் கல்­விச் சேவை, அசாம் திறன் மேம்­பாட்­டுப் பணிக்­குழு ஆகி­யவை இணைந்து தொடங்­கிய ஐந்து நிலை­யங்­களில் இது­வும் அடங்­கும்.

இதில் 17 முதல் 25 வயது வரை­யி­லா­னோர் கட்­டுப்­ப­டி­யா­கும் கட்­ட­ணத்­தில் தர­மான திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­க­ளைப் பெற­மு­டி­யும்.

மார்ச் 2019ல் அமைக்­கப்­பட்ட இந்த நிலை­யத்­தில் பாடத்­திட்ட வடி­வ­மைப்பு, பயிற்­று­விப்­பா­ளர்­க­ளுக்­குப் பயிற்சி வழங்­கு­தல் போன்ற சேவை­களை வழங்­கு­வ­தற்கு 'ஐடீ­சுக்கு' சிங்­கப்­பூர் அர­சாங்­கம் நிதி­யு­தவி வழங்­கி­யது.

சில்­லறை விற்­பனை, அழகு-ஆரோக்­கி­யம், ஹோட்­டல் அறை பரா­ம­ரிப்பு, உணவு-பானம் ஆகிய நான்கு பிரி­வு­களில் ஓராண்­டுப் பயிற்சி வகுப்­பு­கள் இந்த நிலை­யத்­தில் நடத்­தப்­ப­டு­கின்­றன. பயிற்­சி­யின் முடி­வில் மாண­வர்­க­ளுக்­குச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­படும்.

நேர­டிப் பயிற்­சிக்கு முக்­கி­யத்­து­வம் தரும் இந்த நிலை­யத்­தில் பயி­லும் 95 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள், நல்ல வேலை­வாய்ப்­பைப் பெற்­றுள்­ள­னர்.

மிகப் பெரிய நிறு­வ­னங்­களில் வேலை கிடைத்­தா­லும் இவர்­க­ளுக்­குக் கூடு­தல் பயிற்சி தேவைப்­ப­டாது என்று நிலை­யத்­தின் முதல்­வர் இந்­தி­ர­ஜித் சின்ஹா குறிப்­பிட்­டார். வேலை­யில் சேர்ந்த ஆறு மாதங்களில் இந்­நி­லை­யத்­தில் சான்­றி­தழ் பெற்­ற­வர்­க­ளுக்­குப் பதவி உயர்வு கிடைத்­த­தா­க­ அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் குறிப்­பிட்­டார்.

போட்­டித்­தன்மை நிறைந்த வேலைச் சந்­தை­யில் பிற­ரை­வி­ட­வும் வெற்­றி­க­ர­மாக விளங்க, திறன் மேம்­பாட்டு நிலை­யங்­களை நாடும் போக்கு இந்­திய இளை­யர்­க­ளி­டையே நில­வு­கிறது. நிலை­யத்­தில் பயிற்­சி­பெற ஆண்­டுக்கு 16,000 ரூபாய் கட்­ட­ணம் செலுத்­தி­னால் போதும். இருப்­பி­னும் எதிர்­பார்த்­த­தை­வி­டக் குறை­வான மாண­வர்­களே இந்­தப் பயிற்சி வகுப்­பு­களில் பயில்­வ­தாக நிலை­யத்­தின் முதல்­வர் தெரி­வித்­தார்.

எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்­டில் வட­கி­ழக்­குத் திறன் நிலை­யம், அசாம் திறன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்ட பிறகு நிலைமை மேம்­ப­ட­லாம்; பயிற்­சியை முடித்து பணி­யி­டங்­களில் சிறப்­பா­கச் செயல்­படும் பழைய மாண­வர்­கள் இந்த நிலை­யத்­தில் சேரும் விருப்­பத்தை மற்­ற­வர்­க­ளி­டம் விதைப்­பார்­கள் என்று முதல்­வர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.