உத்தரகாண்ட்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிலா குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
'ஆர்டிமெஸ் 1' எனும் திட்டத்தை இம்மாத இறுதியில் அது செயல்படுத்தவிருக்கிறது.
இதில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் பிறந்த அமித் பாண்டே எனும் இளையர் மூத்த விஞ்ஞானியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவில் முதுநிலைப் பட்டம் பெற்று நாசாவில் பணிபுரிகிறார்.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து அமித் பாண்டே தனது இணையத்தளத்தில் மாணவர்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

