கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ. 500 கோடி மோசடி

கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ. 500 கோடி மோசடி

1 mins read
ea22a3dc-7dc7-45a7-a505-5cbc3378a24d
-

புது­டெல்லி: சீனா­வைச் சேர்ந்த சிலர் நடத்­திய கடன் வழங்­கும் செய­லி­கள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். மோச­டிக்கு இவர்­கள் பயன்­ப­டுத்­திய பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் முக்­கி­யத் தக­வல்­க­ளைச் சீனா­வி­லும் ஹாங்­காங்­கி­லும் உள்ள கணி­னித் தர­வுச் சேமிப்­புக் கட்­ட­மைப்­பு­களில் இவர்கள் பதி­வேற்­றம் செய்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

சிறிய அள­வில் கடன் வழங்குவ­தா­கக் கூறி கைத்­தொ­லை­பேசிச் செய­லி­களை இவர்­கள் பயன்­ப­டுத்­தி­னர்.

பதி­வி­றக்­கம் செய்­த­ பிறகு பயனாளர்கள் செயலி கேட்­கும் அனு­ம­தி­க­ளைத் தந்­தால் வங்­கிக் கணக்­கில் பணம் கிடைக்­கும்.

ஆனால் மோச­டிக்­கா­ரர்­கள் பய­னா­ளர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு நிர்­வா­ணப் புகைப்­ப­டத்தை இணை­யத்­தில் பதி­வேற்­று­வ­தாக மிரட்­டிப் பணம் பறித்­த­னர்.

இவ்­வாறு மோசடி செய்த பணத்தை இவர்­கள் மின்­னி­லக்க நாண­யங்­க­ளாக மாற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.