(காணொளி) வரி கேட்ட பெண்ணை அறைந்த ஆடவர், கோபத்தில் ஆடவரை செருப்பால் பளார் பளார்!

(காணொளி) வரி கேட்ட பெண்ணை அறைந்த ஆடவர், கோபத்தில் ஆடவரை செருப்பால் பளார் பளார்!

1 mins read
860dbfd6-844c-4efe-8b6c-8f56e0ce8138
-

போபால்: டோல்கேட் பெண் ஊழியரை, கார் ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததும், பதிலுக்கு அந்த ஆடவரை, பெண் ஊழியர் செருப்பால் அடித்ததும், வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கர்-போபால் சாலையில் கச்னாரியா என்ற சுங்கச்சாவடி உள்ளது. அப்போது, அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. ராஜ்குமார் குர்ஜார் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.

காரை நிறுத்திய அந்த பெண் ஊழியர், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி உள்ளார். ராஜ்குமார், கட்டணம் செலுத்த மறுத்துள்ளார்.

தான் உள்ளூர்க்காரர் என்பதால் கட்டணம் செலுத்த முடியாது என்று ராஜ்குமார் கூறியுள்ளார்.அப்படியானால், உள்ளூர்க்காரர் என்பதை நிரூபிக்க, ஆதாரம், ஆவணம் ஏதாவது காட்டுங்கள் என்று பெண் ஊழியர் கேட்க இதை கேட்டு எரிச்சலடைந்த ஓட்டுநர், அந்த பெண்ணை பளார் என்று அறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், அதிர்ச்சியடைந்து, தன்னுடைய காலில் இருந்த செருப்பை கழட்டி, அந்த நபரை 5,6 முறை படார் படாரென திருப்பி அடித்துவிட்டார். ராஜ்குமார் மீண்டும் பெண்ணைத் தாக்க முயன்றபோது, அப்போதும் பெண் விடவில்லை. விடாமல் ராஜ்குமாரின் தலையிலேயே அடித்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியிலும் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.