காங்கிரஸ் கட்சிப் பொறுப்பிலிருந்து மூத்த தலைவர் விலகல்

காங்கிரஸ் கட்சிப் பொறுப்பிலிருந்து மூத்த தலைவர் விலகல்

1 mins read
0bd6c4f1-15ec-4634-8a6e-fabad2baa9a1
-

புது­டெல்லி: இமாச்­ச­லப் பிர­தேச காங்­கி­ர­சின் வழி­காட்­டும் குழுத்­தலை­வர் பொறுப்­பில் இருந்து விலகு­வ­தாக முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஆனந்த் சர்மா தெரி­வித்­துள்­ளார்.

தமக்கு கட்­சி­யில் உரிய மரி­யாதை அளிக்­கப்­ப­ட­வில்லை என்று சோனியா காந்­திக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது. காங்­கி­ரஸ் கட்­சிப் பொறுப்­பில் இருந்து மூத்த தலை­வர்­கள் அடுத்­த­டுத்து வில­கு­வது, அதன் தலை­மைக்கு நெருக்­க­டியை ஏற்­படுத்தி உள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தோல்­வியை அடுத்து, காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­கள் பலர் ஒருங்­கி­ணைந்து செயல்­பட்டு வரு­கின்­ற­னர். இந்­தக் குழு 'ஜி-23' என்று குறிப்­பி­டப்­ப­டு­கிறது.

கட்­சிக்கு முழு­நே­ரத் தலை­வர் வேண்­டும் என்­றும் நேரு குடும்­பத்­தைச் சாராத ஒரு­வர் தலை­வ­ராக வேண்­டும் என்­றும் அக்­கு­ழு­வில் உள்ள தலை­வர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர். எனி­னும், காங்­கி­ரஸ் தலைமை இக்­கு­ழு­வின் கருத்­து­களை முழு­மை­யாக ஏற்­க­வில்லை.

இந்­நி­லை­யில், கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு ஜம்மு காஷ்­மீர் தேர்­தல் பிர­சா­ரக் குழுத்­த­லை­வர் பத­வி­யில் இருந்து மூத்த தலை­வர் குலாம் நபி ஆசாத் வில­கி­னார். இதை­ய­டுத்து, ஆனந்த் சர்­மா­வும் கட்­சிப் பொறுப்­பில் இருந்து விலகி உள்­ளார்.

"கட்­சி­யில் இடம்பெறும் புறக்­கணிப்பு­களும் அவ­மா­னங்­களும் என் சுய­ம­ரி­யா­தை­யைப் புண்­ணாக்குகின்­றன," என்று சோனி­யா­விற்கு எழு­திய கடி­தத்­தில் ஆனந்த் சர்மா குறிப்­பிட்­டுள்­ளார்.