டெல்லியில் மீண்டும் போராட்டம்; பேரளவில் குவிந்த விவசாயிகள்

டெல்லியில் மீண்டும் போராட்டம்; பேரளவில் குவிந்த விவசாயிகள்

2 mins read
44a03dec-e69d-44bb-81e7-4320beb4c0a9
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்றுக் காலையில் இருந்தே விவசாயிகள் சிறு சிறு குழுக்களாகக் குவியத் தொடங்கினர். அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.படம்: ஏஎஃப்பி -

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை

புது­டெல்லி: பல்­வேறு கோரிக்கை­களை வலி­யு­றுத்தி நேற்று டெல்லி­யில் விவ­சா­யி­கள் திர­ளா­கக் கூடி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

விலை­வாசி உயர்வு, வேலை­ இல்லாத் திண்­டாட்­டம் உள்­ளிட்ட பிரச்­சி­னை­களை முன்வைத்து விவ­சா­யி­கள் நடத்­திய இந்­தப் போராட்­டம் கார­ண­மாக டெல்­லி­யில் பர­பரப்பு நில­வி­யது.

ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் நடை­பெற்ற போராட்­டத்­துக்கு சன்­யுக்த் கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. இந்த அமைப்­பி­னர்­தான் வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்­தை­யும் ஒருங்­கி­ணைத்­த­னர்.

குறைந்­த­பட்­சம் ஐயா­யி­ரம் விவ­சா­யி­கள் திர­ளக்கூடும் என்று எதிர்­பார்த்த நிலை­யில், டெல்­லி­யைச் சுற்­றி­யுள்ள எல்­லைப் பகு­தி­களில் காவல்­து­றை­யி­னர் நேற்று முன்­தினம் மாலை­யில் இருந்தே தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­ட­னர். சில இடங்­களில் வாக­னப் பரி­சோ­த­னை­யும் நடை­பெற்­றது. ஆயு­தங்­கள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­ற­னவா என்று கண்­கா­ணிக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சன்­யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்­பின் தலை­வர் பல்­தேவ் சிங் சிர்சா, தங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்கு அரசு செவி­சாய்க்­கா­விட்­டால் போராட்­டம் தீவி­ர­ப்படுத்தப்படும் என்­றார்.

"பஞ்­சாப், ஹரி­யானா, உத்­த­ரப் பிர­தே­சம், மகா­ராஷ்­டிரா, தெலுங்­கானா, தமி­ழ­கத்­தைச் சேர்ந்த விவ­சா­யி­கள் டெல்லி ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் திரண்­டுள்­ள­னர்.

"எங்­கள் கோரிக்­கை­கள் எப்­போ­துமே போரா­டி­னால் மட்­டுமே கவ­னிக்­கப்­ப­டு­கிறது. அது ஏன்?" என்று பல்­தேவ் சிங் கேள்வி எழுப்­பி­னார்.

டெல்­லி­யில் போரா­டத் திரண்­டி­ருப்­ப­வர்­கள் அனை­வ­ருமே அர­சி­யல் சார்­பற்­ற­வர்­கள் என்று குறிப்­பிட்ட அவர், வேளாண் சட்­டங்­களை எதிர்த்து டெல்லி போராட்­டத்­தில் ஈடு­பட்ட விவ­சா­யி­கள் மீதான வழக்கு­கள் ரத்து செய்­யப்­படும் என்று அறி­வித்­த­படி மத்­திய அரசு நடந்­து­கொள்­ள­வில்லை என்­றார்.

நேற்று நடை­பெற்ற போராட்­டத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் பங்­கேற்­ற­னர். இதன் கார­ண­மாக டெல்­லி­யில் பல்­வேறு இடங்­களில் போக்­கு­வ­ரத்து மாற்றி அமைக்­கப்­பட்­டது. எனி­னும் பல பகு­தி­களில் போக்­கு­வ­ரத்து நிலை­குத்­தி­ய­தால் வாக­ன­மோட்­டி­கள் தவிப்­புக்கு ஆளா­கி­னர்.

போக்­கு­வ­ரத்து நெரி­சலை சமா­ளிப்­ப­தற்கு என கூடு­தல் காவ­லர்­கள் கள­மி­றக்­கப்­பட்­ட­தாக டெல்லி காவல்­துறை தெரி­வித்­தது.

லக்­கிம்­பூ­ரில் விவ­சா­யி­கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­திற்கு நீதி கோரி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள விவ­சா­யி­கள் சங்­கத் தலை­வர்­கள், விவ­சாய உற்­பத்­தி­க­ளுக்­கான குறைந்­த­பட்ச ஆதார விலையை நிர்­ண­யிக்க வேண்­டும் இல்­லா­விட்­டால் போராட்­டம் தொட­ரும் என எச்­ச­ரித்­துள்­ள­னர்.