டெல்லி துணை முதல்வர்: ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்படுத்துமாறு பேரம் பேசியது பாஜக

புது­டெல்லி: தம் மீது பதி­வாகி உள்ள வழக்­கு­கள் அனைத்­துமே பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­படை­யில் தொடுக்­கப்­பட்­டவை என்று டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா தெரி­வித்­துள்­ளார்.

இது­போன்ற அச்­சு­றுத்­தல்­களுக்கு தாம் அடி­ப­ணி­யப் போவ­தில்லை என்­றும் பாஜ­க­வில் இருந்து தம்மை சிலர் தொடர்புகொண்­ட­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

"என் மீதான சிபிஐ, மத்­திய அம­லாக்­கத்­து­றை­யின் வழக்­கு­கள் திரும்­பப் பெறப்­படும் என்று பாஜக தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் இதற்­காக நான் ஆம் ஆத்மி கட்­சி­யில் பிளவை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டது," என்­றார் மணீஷ் சிசோ­டியா.

டெல்லி அர­சின் மது­பானக் கொள்கை நிர்­ண­யித்­தது தொடர்­பில் பல்­வேறு முறை­கே­டு­கள் உள்­ள­தா­க­வும் இது ஊழல் மலிந்த நட­வடிக்கை என்­றும் சிபிஐ குற்­றம்­சாட்டி உள்­ளது.

இவ்விவ­கா­ரம் தொடர்­பாக துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியாமீது வழக்­குப்பதிவு செய்­துள்ள சிபிஐ, அவ­ருக்குச் சொந்­த­மான 21 இடங்­களில் அண்­மை­யில் சோதனை மேற்­கொண்­டது. இந்­த நி­லை­யில், தம்­மைத் தேடப்­படும் நப­ராக அறி­வித்­துள்­ள­னர் என்­றும் வெளி­நாடு செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மணீஷ் சிசோ­டியா கூறி­யுள்­ளார்.

"என் தலையை நானே வெட்­டிக் கொள்­வேனே தவிர எவர் முன்­பா­க­வும் தலை­கு­னிந்து நிற்க மாட்­டேன். என் மீதான அத்­தனை வழக்­கு­களும் பொய்­யா­னவை. உங்­க­ளால் செய்ய முடிந்­ததை செய்துகொள்­ள­லாம்.

"பிர­த­மரே... நான் எங்கே வர வேண்­டும் என்று சொல்­லுங்­கள்," என்று மணீஷ் சிசோ­டியா கேட்டுள்­ளார்.

ஆனால், துணை முதல்­வ­ருக்கு எந்­த­வி­த­மான தடை­யும் விதிக்­கப்­ப­ட­வில்லை என சிபிஐ தெரி­வித்­துள்­ளது. புதிய வழக்­கின் முதல் தக­வல் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள எட்டு தனி நபர்­க­ளுக்கு மட்­டுமே பய­ணத் தடை விதிக்கப்­பட்­டுள்­ள­தாக சிபிஐ விளக்­கம் அளித்­துள்­ளது.

அண்­மை­யில் டெல்லி சுகா­தார அமைச்­சர் சத்­யேந்­திர ஜெயின், சட்­ட­வி­ரோ­தப் பணப் பரி­மாற்ற வழக்­கில் கைதானார். அவர் சிறை­யில் உள்ள நிலை­யில், டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டி­யா­வுக்­கும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

"எத்­தனை அமைச்­சர்­களை விசா­ரித்­தா­லும் சிறை­யில் அடைத்­தா­லும் டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வா­லின் ஆட்சி முறையை மாற்ற இய­லாது. அவர் மக்­க­ளுக்­காக தொடர்ந்து செயல்­ப­டு­வார்.

"நாங்­கள் வகுத்த கொள்­கை­கள் சரி­யா­னவை என்­ப­தில் சந்­தே­கமே இல்லை. புதிய மது­பா­னக் கொள்­கையை அமல்­ப­டுத்­தி­னால்­தான் அதன் பலன்­கள் என்ன என்­பது தெரி­ய­வ­ரும். நான் செய்­துள்ள ஒரே தவறு, கெஜ்­ரி­வால் அர­சில் கல்வி அமைச்­ச­ராக இருப்­ப­து­தான்," என்று மணீஷ் சிசோ­டியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மணீஷ் சிசோடியா­வி­டம் பேரம் பேசி­ய­தா­கக் கூறப்­படு­வதை பாஜக மறுத்­துள்­ளது. பாஜ­க­வில் சேரும்­படி அவ­ருக்கு அழைப்பு விடுத்­தது யார் என்­பதை திரு சிசோடியா தெரி­விக்க வேண்­டும் என்­றும் அக்­கட்சி வலி­யு­றுத்தி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!