கட்காரி: தவறுகள் குறைந்தால் சாலை விபத்துகள் குறையும்

கட்காரி: தவறுகள் குறைந்தால் சாலை விபத்துகள் குறையும்

1 mins read
ad608fbe-8e68-4000-92c6-20c388fdca67
-

மும்பை: இந்­தி­யா­வில் ஆண்டு­தோறும் ஐந்து லட்­சம் சாலை விபத்­து­கள் நிகழ்­கின்­றன என்­றும் அவற்­றில் சிக்கி 1.5 லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் உயி­ரி­ழக்­கின்­ற­னர் என்­றும் மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லைத்­துறை அமைச்­சர் நிதின் கட்­காரி தெரி­வித்­துள்­ளார்.

விபத்து தடுப்­புக்­கான விரி­வான திட்ட அறிக்­கை­களில் ஆலோ­ச­கர்­கள் பல்வேறு தவறுகள் செய்திருப்பதாக மும்­பை­யில் தேசிய சிவில் (கட்­டு­மான) பொறி­யி­ய­லா­ளர்­கள் மாநாட்­டில் பேசுகையில் அவர் குறிப்­பிட்­டார்.

"பெரும்­பா­லான திட்ட அறிக்­கை­கள் பழைமை­வா­தம் என்று குறிப்­பி­டும் வகை­யில் உள்­ளன; பல தவ­று­களும் காணப்­ப­டு­கின்­றன. அதற்­கான கார­ணங்­கள் தெரி­ய­வில்லை.

"எனவே, விரி­வான திட்ட அறிக்­கை­க­ளைத் தயா­ரிப்­ப­தில் தர­மான மாற்­றங்­க­ளைக் கொண்டு­வர வேண்­டும். தவ­று­கள் ஏற்­படும் இடங்­க­ளைக் கண்­ட­றிந்து மேம்­ப­டுத்­து­வ­தற்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து தயார் செய்ய வேண்­டும்," என்­றார் நிதின் கட்­காரி.

சாலை விபத்­து­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­ப­தில் மத்­திய, மாநில அர­சு­கள் தீவிர கவ­னம் செலுத்தி வரு­வ­தாக அவர் மேலும் குறிப்­பிட்­டார்.