புதுடெல்லி: அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது என்றும் இந்தப் பங்கேற்பை மேலும் அதிகரிக்கச் செய்வதே தமது நோக்கம் என்றார் அம்மன்றத்தின் புதிய, இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
38 ஆய்வகங்கள், 4,500 விஞ்ஞானிகளைக் கொண்ட இம்மன்றத்தின் முதல் பெண் இயக்குநரான இவர், அறிவியலைத் தொடரும் பெண்கள் மீதான பெற்றோரின் அணுகுமுறையும் தற்போது மாற்றம் கண்டுள்ளது என்றும் பெண்கள் இப்போது அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்றும் கூறுகிறார்.
"அறிவியலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரிவில் அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பில் அதிவேக வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். இணைய நூலகங்களுக்கான அணுகல் உள்ளிட்ட தொலைவி; இருந்தபடி செயல்பட அனுமதிக்கும் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் பங்கேற்பு அதிகரிக்கும்," என்கிறார் டாக்டர் கலைச்செல்வி.

